Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -விற்க்கப்படும் பெண்கள்! இந்த அவலம் நம் நாட்டிலா?

விற்க்கப்படும் இளம்பெண்கள்! இந்த அவலம் நம் நாட்டிலா?

நல்ல உடை அணிவித்து, தலைவாரி, பூச்சூடி, திருவிழாவிற்கு அழைத்து போனார்கள். பத்து வயதான அந்த சிறுமி திருவிழா பார்க்கும் குதூகலத்துடன் கிளம்பிப்போனாள். அங்கு ஒரு மைதானத்தில் அவளைப் போன்று நிறைய சிறுமிகள் உட்கார வைக்கப்பட்டிருந்தனர். இவளும் அமர்ந்தாள். இவள் அருகில் ஒருவர் வந்தார். கன்னத்தைக் கிள்ளினார் தலையை வருடினார். பாப்பா உன் பெயர் என்ன என்றார் தீபா அகர்வால் என்றாள் அந்த சிறுமி.

அந்த மனிதர் அவளது பெற்றோரை நிமிர்ந்துப்பார்த்து என்ன விலை என்று கேட்டார். ‘ஏழாயிரம்தான் சாமி..!’ என்றார் அவளது தந்தை. அதிக விலை சொல்றீங்களே.. என்றார். ‘இல்லைங்க…! இதை விட குறைக்க முடியாது!’ என்றனர், அவளது பெற்றோர். சரி விடுங்க! நீங்க கேட்கிற பணத்தை கொடுத்திடுறேன் என்ற அவர் பணத்தை எடுத்து அவளது பெற்றோரிடம் நீட்ட, அவர்கள் பணத்தை வாங்கிவிட்டு சிறுமியை அவர்களிடம் தள்ளுகிறார்கள்.

அவள் அழுகிறாள் திரும்பிப் பார்க்காமல் சென்றுவிடுகிறார்கள் பாப்பா பயப்படாதே. நான் உன்னை நல்லா பாத்துக்கறேன். சாக்லெட் வாங்கித் தர்றேன் வா நம்ம வீட்டுக்கு போகலாம் என்கிறார் அந்த மனிதர். சிறுமி மிரண்டு போய் பெருங்குரலெடுத்து அழுகிறாள். சிறிது நேரத்தில் நான்கைந்து பேர் வந்து தூக்கி வண்டியில் போட்டு, அவளை கொண்டுசென்று விடுகிறார்கள். அவளது அழுகுரல் காற்றோடு காணாமல் போய் விடுகிறது.

இது சினிமா காட்சி அல்ல. ராஜஸ்தான் மாநிலத்து கிராமங்களில் இன்றும் நடந்துகொண்டிருக்கும் கொடூரம். பெண் குழந்தைகளை பெற்றோரே விலைக்கு விற்று விடுகிறார்கள். அதுவும் ஆடு, மாடுகளைவிட குறைவான விலைக்கு! மேவாட் என்ற நகரில் காலங்காலமாய் நடந்துவரும் வியாபாரம் இது. அதிகபட்சம் ரூ.35 ஆயிரம் வரைக்கும் இங்கே பெண்கள் விற்பனை செய்யப்படுகிறார்கள். சிறுமி, வயதுக்கு வந்த பெண், இளம்பெண் என்று வயதிற்கேற்றபடி விலை நிர்ணயிக்கிறார்கள்.

இந்த விற்பனை நேரடியாகவோ இடைத்தரகர்கள் மூலமாகவோ நடக்கிறது. வீட்டில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால்கூட சிலர் விற்று விடுகிறார்கள். ஏன் என்று கேட்டால் ‘‘இங்கு வறுமையில் வாடுகிறார்கள். அங்கு போயாவது நன்றாக சாப்பிட்டு வசதியாக வாழட்டும்’’ என்கிறார்கள். இப்படி சந்தையில் வாங்கப்படும் சிறுமிகளை பணக்காரர்கள் தங்கள் வீடுகளில் வீட்டு வேலைக்காக பயன்படுத்துகிறார்கள். சம்பளம் தர தேவையில்லை. மனைவி இல்லாதவர்கள் மனைவியாக வைத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் மனைவிக்குரிய எந்த உரிமையும் அவர்களுக்கு கிடையாது. சமூக அந்தஸ்தும் கிடையாது. இப்படி வாங்கி பயன்படுத்தப்படும் பெண்களை ‘பாரோ’ என்றழைக்கிறார்கள். இந்தப் பாரோக்களை ஒருவர் பணம் கொடுத்து வாங்கி விட்டால் அவர்கள் ஜென்மம் முழுக்க அடிமைகளாகி விடுகிறார்கள். முதலாளி என்ன வேலை சொன்னாலும் செய்யவேண்டும். சரியாக வேலை செய்யாத பாரோக்கள் சவுக்கடி வாங்குவதும் சகஜம்.

ஒருவர் எத்தனை பாரோக்களை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். கட்டிட ஒப்பந்தக்காரர்கள் பல பெண்களை விலைக்கு வாங்கி, வேலைக்கு பயன்படுத்துகிறார்கள். தன்னிடம் வேலை இல்லாதபோது மற்றவர்களுக்கு வாடகைக்கு விடுகிறார்கள். இந்த பாரோக்களுக்கு குழந்தை பிறந்து விட்டால், அதுவும் எஜமானருக்கு சொந்தமான விற்பனை பொருள்தான்.

தாயிடம் இருந்து பிரித்து வேறுயாருக்காவது விற்றுவிடுவார்கள். பாரோக்கள் பெருமளவு சமூக விரோதிகளாலும், பணக்கார கிழவர்களாலும் வாங்கப்படுகிறார்கள். 70 வயது முதியவர் கூட 18 வயது பாரோவை வாங்கிச் சென்று திருமணம் செய்து கொள்கிறார். வீட்டு வேலைக்கும், தனது தேவைக்கும் பயன்படுத்திக்கொள்கிறார்.

சிலர் பாரோக்களை வாங்கி, அதைவிட அதிக விலைக்கு விற்று விடுகிறார்கள். மனைவியை இழந்தவர்கள் மட்டுமல்ல, மனைவி இருப்பவர்களும் மனைவி சம்மதத்துடன் பாரோக்களை விலைக்கு வாங்கி வீட்டிற்குகொண்டு வருகிறார்கள். அவர்களை பல மாநிலங்களுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்கிறார்கள்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top