Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



சிறுவர்களிடம் விற்பனையாகும் மது ;நாடு சிரழிகிறதா.?

சிறுவர்களிடம் விற்பனையாகும் மது ;நாடு சிரழிகிறதா.?

மதுவுக்கு அடிமையாவோர் பெரியவர்கள் மட்டுமல்ல... சிறுவர்களும் தான். தற்போது புதுவையில் பல இடங்களில் பொது இடத்திலேயே மதுவை அவர்கள் அருந்த தொடங்கியுள்ளனர். குறைந்த விலையில் எளிதாக கிடைக்கும் மதுவும் இதற்கு ஓர் காரணம். சுற்றுலா பிரதேசமான புதுவையில் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், படகு பயணம் என ஏராளமான அம்சங்கள் இருக்கின்றன. 

கூடவே, டீக்கடைகள் போல் மது பானக்கடைகள், பார்கள் வரிசையாக பல இடங்களில் இருக்கிறது. புதுவையில் மட்டும் 260 மதுபான பார்கள் உள்ளன. தொடர்ந்து புதிதாக பல பார்களை அரசு தரப்பில் திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மது விற்பனை யும் ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. இதனால், மது அருந் தும் நபர்களை பார்த்து வளரும் குழந்தைகளும் மதுவுக்கு அடிமையாக தொடங்கியுள்ளனர். 

புதுவையில் தற்போது கடற்கரை சாலை, பாரதி பூங்கா உட்பட பல இடங்களில் மதுபானத்தை சிறுவர்கள் அருந்துவதை தாராளமாக பார்க்க முடிகிறது. அக்காட்சியே மேற்கண்ட புகைப்படம். சிறுவர்களுக்கு மது - விற்கும் அந்த கடைக்காரருக்கு கொஞ்சமாவது மனிதாபிமானம் வேண்டாமா.?  இதுவே அவரது பிள்ளைகளாக இருந்தால் இப்படி தரம் கெட்ட செயலை செய்வார்களா....?


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top