Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இந்த விளம்பரத்த கண்ட 500 பேர் கவுந்துட்டாங்கையா.?

இந்த விளம்பரத்த கண்ட 500 பேர் கவுந்துட்டாங்கையா.?

சாலையோர கவர்ச்சி விளம்பர பலகைகளால் விபத்துக்கள் ஏற்படுவதாக கூறி போராட்டங்கள் ஒரு புறம் நடந்து வருகின்றன. இந்த நிலையில், ரஷ்யாவில், டிரக்குகளில் பொருத்தப்பட்டிருந்த படு கவர்ச்சியான விளம்பர பலகைகளால் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

ரஷ்யாவை சேர்ந்த விளம்பர நிறுவனம் ஒன்று வாகனங்களின் பக்கவாட்டில் விளம்பர பலகைகளை பொருத்துவதற்கு முடிவு செய்தது. மேலும், இதுபோன்று விளம்பரம் செய்ய வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பெண் ஒருவர் மார்பகங்களை காட்டும் வகையில், படு கவர்ச்சியான விளம்பர பலகைகளை டிரக்குகளில் பொருத்தி மாஸ்கோ சாலைகளில் விட்டது. 

இந்த விளம்பர பலகைகள் பொருத்தப்பட்ட வாகனங்களை பார்த்த வாகன ஓட்டிகள் தடுமாறி, பிற வாகனங்கள் மீது மோதினர். இதனால், மாஸ்கோ நகரில் ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டன. இதுகுறித்து போலீசாருக்கு புகார்கள் குவியத் துவங்கியது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட டிரக்குகளை ரோந்து வாகனங்களில் சென்று போலீசார் மடக்கி பிடித்தனர்.....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top