Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



உலகில் சக்தி வாய்ந்த 5 ராணுவம் எவை தெரியுமா.?

உலகில் சக்தி வாய்ந்த 5 ராணுவம் எவை தெரியுமா.?

உலகத்தில் உள்ள சக்தி வாய்ந்த ராணுவங்களைப் பற்றி தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். ஒரு காலத்தில் மேற்கத்திய நாடுகள் பக்கம் அதிகமாக சாய்ந்திருந்த வீதம் இன்று மாறத் துவங்கியுள்ளது. உதாரணத்திற்கு, இந்தியா மற்றும் சீனா உட்பட, ஆசிய நாடுகள் பலவும் தங்களின் பாதுகாப்பிற்காக பட்ஜெட் செலவுகளை அதிகரித்து வருகின்றனர். அதே போல் தன்னுடைய ராணுவ சக்தியை காட்டும் எண்ணத்தில் பலவீனமான அதன் அண்டை நாடுகளின் மீது மேலாதிக்கத்தை செலுத்தி வருகிறது. 

ராணுவ தொழில்நுட்பம், சிறந்த ராணுவ வீரர்களை உருவாக்கும் பயிற்சிகள் மற்றும் செயற்பாட்டு நுட்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ராணுவங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் உள்ள சில சக்தி வாய்ந்த ராணுவம் தான் உலகத்தில் உள்ள மிகப்பெரிய ராணுவங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...... 

இந்தியா;தன் ராணுவத்தை நவீனமயமாக்குவதில் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது இந்தியா. அதனால் தன் ராணுவ செலவுகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வியப்பூட்டும் வகையில் 1.1 கோடி ராணுவ வீரர்களை கொண்டுள்ள இந்திய ராணுவம் தான், எண்ணிக்கை அடிப்படையில் உலகத்தில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய இராணுவமாகும். 

ராணுவத்திற்காக இந்தியா 46 பில்லியன் அமெரிக்க டாலரை செலவு செய்கிறது. வரும் வருடங்களில் இந்த தொகை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் உலகத்தில் உள்ள மிகப்பெரிய ஆயுத பொருட்கள் இறக்குமதியாளராக விளங்குகிறது இந்தியா. 

அமெரிக்கா;ஈடு இணையில்லாத அளவிற்கு 612 பில்லியன் அமெரிக்க டாலரை பாதுகாப்பு பட்ஜெட்டிற்கு ஒதுக்கியுள்ள அமெரிக்காவின் ராணுவம் மிகுந்த சக்தி வாய்ந்ததாகவும், நுட்பம் வாய்ந்ததாகவும் செயல்படுகிறது. கற்பனை செய்ய முடியாத அளவிற்கு 19 விமானம் தாங்கிகளை வைத்துள்ளது அமெரிக்கா. உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளின் விமான தாங்கிகளையும் கூட்டினாலும் கூட இவர்களுக்கு அருகில் செல்ல முடியாது; அதன் எண்ணிக்கை மொத்தம் 14 மட்டுமே. 

உங்களுக்கு தெரியுமா - பாதுகாப்பிற்காக பட்டியலில் உள்ள அடுத்த 10 நாடுகள் செலவழிக்கும் கூட்டு தொகையை விட அமெரிக்க அதிகமாக செலவிடுகிறது. அதனால் தான் உலகத்தில் உள்ள மிகப்பெரிய சக்தி வாய்ந்த ராணுவத்தை அமெரிக்கா கொண்டுள்ளது. 

ரஷ்யா;USSR காலத்தை விட தற்போதைய ரஷ்ய ராணுவம் தான் மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளது. தன் செலவுகளை வருடந்தோறும் அதிகரித்து கொண்டே வரும் ரஷ்யா, தன் கவனத்தை உச்ச சிறப்புமிக்க ராணுவ தொழிநுட்ப ஆராய்ச்சியில் செலுத்தியுள்ளது. உலகத்தில் உள்ள மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக விளங்குகிறது ரஷ்யா. அதே போல மிகப்பெரிய பீரங்கி படையை கொண்டுள்ளது - கிட்டத்தட்ட 15,500 பீரங்கிகளை வைத்துள்ளது. முனைப்புடன் செயல்படும் அதன் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மட்டும் 7,60,000 பேர்கள். 

சீனா;உலகத்தில் உள்ள மிகப்பெரிய ராணுவம் சீனா. அதே போல் ராணுவம் மற்றும் பாதுகாப்பிற்கு செலவு செய்வதில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள நாடும் சீனா. ராணுவ செலவுகளை அதிவேகமாக அதிகரித்து வருகிறது சீனா. இறக்குமதியை பெருமளவில் குறைத்துக் கொண்ட சீனா தற்போது தன் கவனத்தை உள்நாட்டு தொழில்நுட்ப வளர்ச்சியின் மீது செலுத்தியுள்ளது. தன் அண்டை நாடுகள் மீதான அதன் சமீபத்திய மோதல்கள், அதன் தாக்கக்கூடிய அணுகுமுறையை எடுத்துக் காட்டுகிறது. கற்பனை செய்து பார்க்க முடியாத 25 லட்ச ராணுவ வீரர்களை கொண்டுள்ளது சீனா. 

யூனைடட் கிங்டம்;கடந்த 5 வருடத்தில் யூனைடட் கிங்டமின் பாதுகாப்பு பட்ஜெட் கிட்டத்தட்ட 20 சதவீத சரிவை சந்தித்துள்ளது. மேலும் தன் ராணுவத்தின் அளவையும் 20 சதவீத அளவிற்கு குறைக்க அது திட்டமிட்டுள்ளது. தொழில் நுட்பம் மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதிலும் தன் கவனத்தை செலுத்தியுள்ளது UK. உலகத்தில் உள்ள சக்தி வாய்ந்த ராணுவத்தின் பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது UK.......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top