Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



30 நாளில் கட்டுமஸ்தான தோள்பட்டையை பெறணுமா?

30 நாளில் கட்டுமஸ்தான தோள்பட்டையை பெறணுமா?

இந்த பயிற்சி ஆண்களுக்கு மிகவும் சிறந்த பலனை தரக்கூடியது. இந்த பயிற்சி செய்ய ஆரம்பித்த 1 மாதத்தில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். இந்த பயிற்சியை நின்று கொண்டோ அல்லது உட்கார்ந்து கொண்டே செய்யலாம். முதலில் டம்ப்பெல்ஸ் எடுத்து கொள்ளவும். உங்களுக்கு முடிந்த அளவிற்கு டம்ப்பெல்சில் எடையின் அளவை அதிகப்படுத்தவோ அல்லது குறைத்தோ கொள்ளலாம். 

விரிப்பில் மீது நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டே டம்ப்பெல்சை கைகளால் பிடித்து கொள்ளவும். முதலில் வலது கையை கீழே தொங்க விடவும். இடது கையால் டம்ப்பெல்ஸ் பிடித்து கொண்டு தலைக்கு பின்புறமாக கொண்டு செல்லவும். பின்னர் மெதுவாக டம்ப்பெல்சை மேலே தூக்கி கீழே இறக்க வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும். பின்னர் கைகளை மாற்றி வலது பக்கம் 15 முறை செய்ய வேண்டும். 

இதே போல் இரு கைகளாலும் டம்ப்பெல்ஸ் பிடித்து கொண்டு வீடியோவில் உள்ளபடி மேலும், கீழும் ஏற்றி இறக்க வேண்டும். ஆரம்பத்தில் 15 முறையும் பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். இந்த பயிற்சியை செய்ய செய்ய தோள்பட்டை உருண்டு திரண்டு பார்க்க கவர்ச்சியாகவும், வலிமையாகவும் தெரிய ஆரம்பிக்கும்.....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top