Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



கன்னியாகுமரியில் செக்ஸ் ஸ்பிரே - எச்சரிக்கை தகவல்!

கன்னியாகுமரியில் செக்ஸ் ஸ்பிரே - எச்சரிக்கை தகவல்!

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளிடம் போலி ‘செக்ஸ் ஸ்பிரே‘ விற்பனை செய்யும் கும்பல் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. கன்னியாகுமரியில் சில நாட்கள் மட்டும் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து அந்த ‘செக்ஸ் ஸ்பிரே‘ விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த பொருட்களை வாங்கிய ஆண்களும் அதை ரகசியமாக எடுத்துச்சென்றனர். 

இது கடற்கரையில் பொருட்கள் விற்பனை செய்யும் மற்ற வியாபாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி அவர்கள் அந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள் இதுபற்றி விசாரணை நடத்தியபோது ஆண்கள் நீண்ட நேரம் உறவில் ஈடுபடும் வகையில் கிளர்ச்சியை தூண்டும் ஒருவித செக்ஸ் ஸ்பிரே என்பது தெரியவந்தது. 

அதை வெளிநாட்டு பயணிகள் வாங்கி பயன்படுத்தி வருவதும் தெரியவந்தது. மேலும் அது உண்மையில் செக்ஸ் ஸ்பிரே இல்லை என்பதும், மிகவும் குறைந்த விலை மதிப்புள்ள நறுமண பொருளான அதை, ரூ.400 முதல் ரூ.500 வரை அந்த கும்பல் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. 

அதை பயன்படுத்தியவர்களுக்கு தோலில் அரிப்பும், எரிச்சலும் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகுதான் செக்ஸ் ஸ்பிரே போலியானது என்று சம்பந்தப் பட்டவர்களுக்கு தெரியவந்துள்ளது.  இதை வெளியே சொன்னால் வெட்கக்கேடு என்று நினைத்து புகார் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். அதன் அடிப்படையில் இந்த தகவலை சமூக ஆர்வலர்கள் கன்னியாகுமரி போலிசாருக்கு தெரிவித்துள்ளனர்.

காசு கொடுத்து நமக்கே சூன்யம் வச்ச கதையா இல்ல இருக்கு.....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top