Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


இந்த பெண்ணை யாராவது வாடகைக்கு வாங்குங்க?..

என் காதலியை யாராவது வாடகைக்கு வாங்குங்கய்யா.?

புதிதாக அறிமுகமாகியுள்ள ஐபோன்-6 வாங்க பணம் திரட்டுவதற்காக தனது காதலியை வாடகைக்கு விடுவதாக அறிவித்துள்ளார் சீன கல்லூரி மாணவன் ஒருவர். சீனாவின் ஷாங்காய் நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் தனது காதலியான ஜியாவோ அய்-யை வாடகைக்கு விடப்போவதாக அறிவித்து, அது பற்றிய வாசகங்கள் அடங்கிய போஸ்டரை, தான், கல்வி பயிலும் சோன்ங்ஜியாங் பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே ஒட்டியுள்ளார். 

அந்த போஸ்டரில் காதலியின் போட்டோவை ஒட்டி, அவரது உயரம் 170, எடை 48 கிலோ என்பது போன்ற விவரங்களை வாலிபர் எழுதியுள்ளார். காதலியுடன் நேரத்தை செலிவிட விரும்புவோருக்கு கட்டணத்தையும் நிர்ணயித்துள்ளார் அந்த வாலிபர். அதன்படி, ஒரு மணி நேரம் செலவிட 1 பவுண்ட்டும், நாள் முழுக்க செலவிட 5 பவுண்ட்டும், ஒரு மாதத்தை செலவிட 50 பவுண்ட்டும் வாடகையாக நிர்ணயித்துள்ளார். 

வாடகைக்கு கேட்கும் நபர்கள் தனது காதலியோடு சாப்பிடலாம், விளையாடலாம், படிக்கலாம், டேட்டிங் செல்லலாம். ஆனால், காதலியிடம் தவறாக நடந்து கொள்ள அனுமதி கிடையாது என்று நிபந்தனை விதித்துள்ளார். சீன நாட்டு சமூக ஊடகங்களில் இந்த வாலிபர் குறித்துதான் பேச்சாக உள்ளது....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top