Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



60,000 கிலோ எடையில் உலகின் மிகப்பெரிய டைனோசர் கண்டுபிடிப்பு!.

85 அடி உயரமுள்ள உலகின் மிகப்பெரிய டைனோசர் கண்டுபிடிப்பு!.

7 டைனோசர்கள் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கவே வியப்பாக இருக்கிறது. ஆனால், அப்படி ஒன்று ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்துள்ளது என நிரூபித்திருக்கிறது விஞ்ஞானம். டிரெக்ஸல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கென்னத் லேகோவரா அர்ஜெண்டினாவின் படகோனியா பகுதியில் உலகின் பிரம்மாண்ட டைனோசர் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை கண்டுபிடித்திருக்கிறார். 

தற்போது வரை உலகின் மிகப்பெரிய டைனோசராக கருதப்படும் டி.ரெக்ஸை போல 7 மடங்கு பெரியதாக இந்த டைனோசர் இருந்துள்ளது. அதனுடைய, எலும்புக்கூடுகள் மண்ணில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த டைனோசர் 12 ஆப்பிரிக்க காட்டு யானைகளின் எடைக்கு சமமானது. அதனுடைய மண்டை ஓட்டை ஆராய்ச்சி செய்ததில் 65 டன் எடை கொண்டதாக இருக்கலாம் என தெரிகிறது. 

37 அடி நீளமுள்ள கழுத்தை கொண்டுள்ள இந்த டைனோசர் மொத்தம் 85 அடி உயரத்தை கொண்டிருந்துள்ளது. இதுவரை ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளவற்றில் இந்த டைனோசர்தான் பூமியில் வாழ்ந்த மிகப்பெரிய உயிரினமாகும். ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுக்கப்பட்ட டைனோசரின் எழும்புகளை 70 சதவீதம் வரை ஒன்றிணைத்திருக்கிறார்கள். 

முழுவதும் இணைத்த பிறகு முழு ஆராய்ச்சியின் தகவலும் வெளிவர உள்ளது. எனினும், விஞ்ஞானிகளின் முடிவுப்படி, புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மெகா டைனோசர் பெரும்பாலும், தாவரங்களை மட்டுமே உணவாக உட்கொள்ளக்கூடிய 'டிட்டனோசரஸ்' வகையை சார்ந்தது என தெரிவித்தனர்....!

85 அடி உயரமுள்ள உலகின் மிகப்பெரிய டைனோசர் கண்டுபிடிப்பு!.

85 அடி உயரமுள்ள உலகின் மிகப்பெரிய டைனோசர் கண்டுபிடிப்பு!.

85 அடி உயரமுள்ள உலகின் மிகப்பெரிய டைனோசர் கண்டுபிடிப்பு!.

85 அடி உயரமுள்ள உலகின் மிகப்பெரிய டைனோசர் கண்டுபிடிப்பு!.


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top