Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பெண்ணின் மர்ம உறுப்பை சிதைத்த கொடூர போலீஸ்!..

பெண்ணின் பாலுறுப்பை சிதைத்து சித்திரவதை செய்த போலீஸ்!..

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரில் லீலாவதி என்ற பெண்மணி கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி தனது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு குறித்து அவரது வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்த ஹோட்டல் தொழிலாளியான சந்திரா என்கிற நடுத்தர வயது பெண்மணியை உடுமலைப்பேட்டை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். சட்டவிரோதமாக காவல்நிலையத்தில் பல நாட்கள் அடைத்து வைத்து 7 காவலர்கள் விசாரணை என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனமாக அவரை சித்ரவதை செய்துள்ளார்கள். 

அவருடைய விரல் நகக்கண்களில் ஊசியால் குத்திய தோடு, அவரை தலைகீழாகத் தொங்கவிட்டு அடித்துள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக, அவருடைய மர்ம உறுப்பில் காவல் துறையினர் லத்தியால் குத்தி சித்ரவதை செய்துள்ளனர். இதனால் ரத்தம் வடிந்திருக்கிறது. இத்தகைய கடுமையான சித்ரவதை செய்து லீலாவதி படுகொலை குறித்து ஒரு ஒப்புதல் வாக்குமூலம் காவல்துறையினர் பெற்றுள்ளனர். இது குறித்து தகவலறிந்து அவருடைய மகள் பி.ராஜகுமாரி என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். 

அதில், "எனது தாய் சந்திரா உடுமலைப்பேட்டையில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 10-ஆம் தேதி, எனது தாய் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டுவிட்டார். அது குறித்து விசாரணை செய்வதற்காக எனது தாயை உடுமலைப்பேட்டை போலீஸார் அழைத்துச் சென்றதாக எனது தாய் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார். 

அழைத்துச் சென்ற எனது தாயை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் சித்திரவதை செய்துள்ளனர். எனவே, போலீஸ் காவலில் வைத்து எனது தாய் சித்திரவதை செய்யப்பட்டது குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் அவருக்கு உரிய சிகிச்சை வழங்கவும் உத்தரவிட வேண்டும்'' என கோரப்பட்டிருந்தது.

இந்த விசாரணைக்குப் பிறகு புதன்கிழமை நீதிபதி பிறப்பித்த உத்தரவு: போலீஸ் காவலுக்கு உத்தரவிட்ட நீதிபதியின் அறிக்கை, உடுமலைப்பேட்டை மருத்துவமனையின் அறிக்கை, கோவை அரசு மருத்துவமனையின் அறிக்கை, கோவை மாவட்ட நான்காவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் அறிக்கை ஆகியவற்றைப் பார்க்கும்போது, சந்திராவின் உடலில் காயங்கள் இருப்பதைப் பதிவு செய்துள்ளது தெரியவருகிறது. இதை உடுமலைப்பேட்டை காவல் ஆய்வாளர் மறுக்க முடியாது. 

இதை மறைப்பதற்காக சந்திரா போதையில் கீழே விழுந்ததால், அவரது உடலில் காயம் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தது தெரிய வருகிறது. சந்திராவின் உடலில் காயங்கள் சந்திரா உடலில் உள்ள காயத்துக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது மட்டுமில்லாமல், வழக்கு விசாரணைக்கும் சட்ட ரீதியான குறுக்கீடு தேவை என இந்த நீதிமன்றம் கருதுகிறது. 

குற்றச்சாட்டுகளின் தன்மையைப் பார்க்கும்போது, அது குறித்து விசாரணை செய்ய வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். இந்த வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்தால் மட்டுமே சரியாக இருக்கும். மேலும் பல்நோக்கு மருத்துவமனையின் எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சைத் துறை டாக்டர் அளித்த அறிக்கையில் சந்திராவின் உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டு 3 வாரங்களுக்கு மேல் இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

இதைப் பார்க்கும்போது போலீஸ் காவலில் இருக்கும் போதுதான் எலும்பு முறிவு ஏற்பட்டது என்பது உண்மையாகிறது. இதற்கு இடைக்கால நஷ்ட ஈடாக ரூ. 2 லட்சத்தை தமிழக அரசு சந்திராவுக்கு வழங்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளின் ஆவணங்களையும் ஆய்வு செய்து, மூன்று மாதங்களுக்குள் விசாரணை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சந்திராவின் ஜாமீன் மனுவை ஒரு வாரத்துக்குள் முடித்து வைக்க வேண்டும். மேலும், இரண்டு வாரங்களுக்குள் ரூ. 2 லட்சத்தை சந்திராவிடம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top