Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


பேன் தொல்லையை ஒழிக்க பெஸ்ட் ட்ரீட்மெண்ட்.!!

பேன் தொல்லையை ஒழிக்க பெஸ்ட் ட்ரீட்மெண்ட்

பேன் தொல்லை;கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த பேன் தொல்லைக்கு ஒரேயடியாக முடிவு கட்டுகிறது. இந்த ட்ரீட்மெண்ட்...

வேப்பிலை-1 பிடி, 
சீயக்காய்-5, 
தோல் நீக்கிய கடுக்காய்-1, 
கொட்டை எடுத்த புங்கங்கொட்டை-3, 
செம்பருத்தி இலை-1 பிடி... 

இவற்றை இரவே தண்ணீரில் ஊறவிடுங்கள். காலையில் அரைத்து அந்த விழுதை தலையில் தேய்த்துக் குளியுங்கள். இந்த வாசனைக்கே பேன் தப்பித்து ஓடுவதுடன், உங்கள் தலை பக்கம் இனிமேல் எட்டிப் பார்க்கக்கூடப் பயப்படும்.

தலை அரிப்பு;தாங்க முடியாத தலை அரிப்பால் அடிக்கடி தலைக்குள் கைவிட்டு `கிடார்' வாசிப்பவர்களுக்கும் கூந்தல் பிசுபிசுப்பால் தலையில் குப்'பென்று அடிக்கிற வியர்வை துர்நாற்றத்தால் நொந்து போகிறவர்களுக்கு தலை மேல் பலன் கொடுக்கிற பேக் இது... 

வேப்பிலை தூள்- அரை டீஸ்பூன், 
கடுக்காய்த்தூள்- அரை டீஸ்பூன், 
வெந்தயத்தூள் - 2 டீஸ்பூன், 
பயத்தமாவு-2 டீஸ்பூன், 
எலுமிச்சைச்சாறு - 1டீஸ்பூன்... 

இவற்றுடன் வெந்நீரை கலந்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். தலைக்கு `பேக்' போட்டு, பத்து நிமிடம் கழித்து அலசுங்கள். வாரம் ஒரு முறை இந்த `பேக்' போட்டுப் பாருங்கள். பிசுபிசுப்பு, வியர்வை துருநாற்றத்திலிருந்து நிரந்தரமாக விடுதலையாகி விடுவீர்கள். சீயக்காயுடன் வேப்பம்பட்டையை உலர்த்தி அரைத்தும் பயன்படுத்தலாம். தலை அரிப்பு ஓடியே போய்விடும்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top