Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


சர்க்கரை நோயாளிகள் தெரிந்து கொள்ள வேண்டியது.?

கண்டிப்பா இச்செய்தியை சர்க்கரை நோயாளிகள் மனதில் வைங்க!.

இன்றைய காலத்தில் சர்க்கரை நோய் முதுவயதை கடக்கும் பலருக்கு இருக்கிறது. வாய்கிழிய பேசுபவர்களிடம் சர்க்கரை நோய்க்கு என்ன முதல் உதவி செய்வது என்று கேட்டால், பதில் சொல்ல திணறி போவார்கள். எதைச்செய்தாலும் உரிய நேரத்தில் முதலில் செய்ய வேண்டும் என்பார்கள். உதவியும் அப்படித்தான்.

முதலில் செய்தால்தான் அது பயன் உள்ளதாக இருக்கும். எனவே தான் முதல்- உதவி முக்கியத்துவம் பெற்றுள்ளது. அப்படி இருக்கக்கூடாது சர்க்கரை நோய்க்கு, என்ன முதல் உதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.....

சர்க்கரை ரத்தத்தில் அதிகமானால்: உலர்ந்த சருமம், வேகமான நாடி, கடின சுவாசம், தாகம், சிறுநீர் கழிக்க அடிக்கடி தோன்றும், குமட்டல், சுவாசம் வார்னிஷ் வாசனை வரும். வயிற்றில் வலி. .

சிகிச்சை:மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும். சுயநினைவு இழந்து விட்டால், மீட்பு நிலையில் படுக்க வைக்கவும். 

சர்க்கரை குறைந்து விட்டால்:வலுவிழந்த, மயக்கமான நிலை, குழப்பம், தோல் வெளுத்து குளிர்ந்து பிசு பிசுப்பாக காணப்படும். வலுவான வேகமான நாடி, மேல் மூச்சு, பசி, நெற்றி, மூக்கின் மேல் முத்து முத்தாக வேர்வைத் துளிகள்- வாசனை அற்ற சுவாசம். 

சிகிச்சை:உடனே இனிக்கும் திரவம் - ஒரு டம்ளர் தண்ணீரில் 2 தேக்கரண்டி சர்க்கரை அல்லது "ஜாம்'' கரைத்து குடிக்கச் சொல்லவும். அல்லது தேனீரில் அதிக சர்க்கரை கலந்து, ஆரஞ்சு பழச்சாறு போன்றவற்றை சிறிது சிறிதாக விழுங்கச் சொல்லி கொடுக்கவும். கோ கோ கோலா, போன்ற வாயு நிறைந்த பானங்கள் கொடுக்க வேண்டாம்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top