Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



49 லட்சத்தில் நடிகையின் உதட்டில் முத்தமிட்ட இந்தியர்!.

49 லட்சத்தில் நடிகையின் உதட்டில் முத்தமிட்ட இந்தியர்!.

நடிகை ஹர்லேயின் முத்தத்திற்கு கனடாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ.49 லட்சத்தை செலவிட்டுள்ளார். லண்டனில் பிரபல ஹொட்டல் ஒன்றில், எல்டன் ஜான் எயிட்ஸ் (Eldon Jhon Eides Trust) அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்கான நிகழ்ச்சி நடந்தது. இதில் பல பொருட்கள் ஏலத்துக்கு விடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பிரபல பணக்காரர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் உச்சமாக, அதில் கலந்து கொண்ட நடிகை எலிசபெத் ஹர்லே தன்னை முத்தமிடலாம் என்று அறிவித்து அதற்கான ஏலத்தையும் அறிவித்தார். 

இதில் கனடாவில் வங்கியை நடத்திவரும் பிரபல கோடீஸ்வரரான இந்திய வம்சாவளி ஸ்டான் பாரதியின் மகனான ஜூலியன் பாரதி ரூ.49 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார். மூன்று குழந்தைகளுக்கு தந்தையான ஜூலியன், 49 வயதாகும் நடிகை ஹர்லேயின் உதட்டில் முத்தமிட்டு ஏலத்தை முடித்துக் கொண்டார். இதுகுறித்து ஜூலியன் கூறுகையில், இந்த முத்தம் குறித்து எனது காதல் மனைவி எந்த பிரச்சனையும் செய்யவில்லை என்றும் மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டார் எனவும் கூறியுள்ளார்....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top