ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பையடுத்து, தென்காசி பஸ் மீது கல் வீசி தாக்கிய அதிமுக பிரமுகர் மீது சம்பந்தப்பட்டப் பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை ஏற்றி காயப் படுத்திய சம்பவத்தால் நெல்லை அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 18 வருடமாக நடைபெற்று வந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, அவர்களுக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப் பட்டதையடுத்து அவரது தமிழக முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. இதனால் ஆவேசமடைந்த அதிமுகவினர் தீர்ப்பு அறிவிக்கப் பட்டதிலிருந்து மாநிலத்தின் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தமிழகம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், நெல்லையிலிருந்து தென்காசி நோக்கிச் சென்ற அரசு பேருந்தை அதே பகுதியைச் சேர்ந்த நாலாயிரம் என்ற அதிமுகத் தொண்டர் கல்வீசித் தாக்கியுள்ளார். ஆனபோதும், பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார் ஓட்டுநர். அப்போது எதிர்பாராதவிதமாக கல்வீசிய நாலாயிரம் மீது பேருந்து மோதியது.
இதில் பலத்த காயமடைந்த நாலாயிரம், உடனடியாக சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக நெல்லைப் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இப்படிபட்ட போராட்டங்களால் பஸ் கண்ணாடி உடைக்கபடுதல் அல்லது தீ வைத்து எரிக்க
முயற்றி செய்யும் நபர்களுக்கு இப்படிபட்ட ஸ்பாட் தண்டனை எதிர்கால தமிழகதிற்கு
தேவையானதா..?