Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



1500 கிலோ தங்கத்தால் ஆன கோவில் தமிழ்நாட்டில் இருப்பது தெரியுமா.?

1500 கிலோ தங்கத்தால் ஆன கோவில் தமிழ்நாட்டில் இருப்பது தெரியுமா.?

ஸ்ரீபுரம் தங்கக்கோயில் எனும் இந்த பிரசித்தமான ஆன்மீகத்தலம் வேலூர் நகரத்தில் மாலைக்கொடி எனும் இடத்தில் உள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பொற்கோயில்,சிதம்பரம் நடராஜர் சன்னதி,மதுரை மீனாட்சி, பழநி முருகன், புதுச்சேரி மணக்குள விநாயகர், திருப்பதி வெங்கடாசலபதி போன்ற பல பெரிய கோயில்களில் மூலஸ்தான விமானங்கள் தங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளன. 

ஆனால் வேலூர் ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி கோயில் 5 ஆயிரம் சதுர அடிபரப்பளவும் தங்கத்தால் இழைக்கப்பட்டு தங்க கோயிலாக விளங்குகிறது. இக்கோயில் 1500 கிலோ தங்கத்தில், ரூ.350 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.  தங்கக் கோயிலை எழுப்பிய சக்தி அம்மா இக்கோயில் பற்றி கூறும் போது, "மக்களை ஆன்மிக சம்பந்தமான கருத்துக்களை கேட்க வைப்பதும், கோயிலுக்கு வரவழைப்பதும் கடினம். 

இப்படி ஒரு பிரமாண்டமான தங்கக்கோயில் என்றால் அதைப்பார்ப்பதற்கு மக்கள் உடனே வந்து விடுவார்கள். அவ்வாறு வரக்கூடிய மக்கள் தங்ககோயிலில் அருள்பாலிக்கும் மகாலட்சுமியை தரிசிப்பதுடன் உள்ளே எழுதப்பட்டிருக்கும் ஆன்மிக தத்துவங்களையும் படித்துச் செல்வார்கள் என்றார்....!

1500 கிலோ தங்கத்தால் ஆன கோவில் தமிழ்நாட்டில் இருப்பது தெரியுமா.?

1500 கிலோ தங்கத்தால் ஆன கோவில் தமிழ்நாட்டில் இருப்பது தெரியுமா.?

1500 கிலோ தங்கத்தால் ஆன கோவில் தமிழ்நாட்டில் இருப்பது தெரியுமா.?


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top