Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இனி கடல் வழியா இந்த பஸ்ஸில் கன்னியாகுமரிக்கு போலாமோ.?

இனி கன்னியாகுமரிக்கு கடல் வழியா இந்த பஸ்ல போலாமோ.?

இதுவரை தரையில் மட்டுமே செல்லக்கூடிய மோட்டார் இல்லங்கள் பற்றி செய்திகளை படித்திருப்பீர்கள். இந்த நிலையில், தரையிலும், தண்ணீரிலும் செல்லும் வசதி கொண்ட புதிய மோட்டார் இல்லம் ஒன்றை டெர்ரா விண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் சமையலறை, குளியலறை, படுக்கை வசதிகள் உள்ளன.தண்ணீரில் செல்லும்போது பயன்படும் நவீன திசைகாட்டும் வசதி உண்டு.தரையில் மணிக்கு 130 கிமீ வேகத்திலும், தண்ணீரில் மணிக்கு 13 கிமீ வேகம் வரையிலும் செல்லும்.

பார்ப்பதற்கு ஆம்னி பஸ் போன்று இருக்கும் இந்த ஆம்பிபியஸ் பஸ் தரையிலிருந்து எளிதாக தண்ணீருக்குள் மிதந்து செல்கிறது. சரிவான இடங்களில் தண்ணீரில் எளிதாக இறக்கவும், ஏற்றவும் முடியும். உல்லாச பயணங்கள், வார இறுதி பயணங்களில் ஓர் புதிய அனுபவத்தை வழங்கும் வசதிகளுடன் இந்த புதிய மோட்டார் இல்லத்தை கட்டமைத்துள்ளது டெர்ரா விண்ட். இந்த மோட்டார் இல்லத்தின் வசதிகளை வீடியோவில் காணலாம்....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top