Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


கோல்கேட் பற்பசையில் புற்றுநோயை உருவாக்கும் காரணி..அதிர்ச்சி தகவல்!.

கோல்கேட் பேஸ்ட்டில் புற்றுநோய் காரணி அம்பலமாகிய அதிர்ச்சி தகவல்!.

புற்றுநோய்க்குக் காரணமான முக்கியமான ஒரு வேதிப் பொருளைத்தான் பல லட்சம் அமெரிக்கர்கள் தினசரி பயன்படுத்தி வருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. அதாவது கோல்கேட் டோட்டல் பற்பசையில் இடம் பெற்றுள்ள ஒரு வேதிப் பொருள் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளில் ஒன்று என்று இந்த ஆய்வு கூறுகிறது. பற்களில் ஏற்படும் ஈறு பாதிப்பை ஏற்படுத்தும் நோயைக் குணமாக்க கோல்கேட் பேஸ்ட்டில் டிரைக்ளோசன் என்ற வேதிப் பொருள் சேர்க்கப்படுவதாக கோல்கேட் நிறுவனம் கூறுகிறது. 

ஆனால் இந்த வேதிப் பொருள் புற்று நோயை ஏற்படுத்தும் என்று ஆய்வு எச்சரிக்கிறது. இந்த வேதிப் பொருள் பாதுகாப்பானது, பயன்படுத்தலாம் என்று கடந்த 1997 ஆம் ஆண்டு அமெரிக்க மருந்து அமைப்பு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த அனுமதிக்குப் பின்னர் சில தவறுகள் நடந்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. 

அதாவது கோல்கேட் தயாரிப்பு நிறுவனம் கொடுத்த ஆய்வறிக்கையை அடிப்படையாக வைத்து இந்த அனுமதியை உணவு மற்றும் மருந்துக் கழகம் கொடுத்துள்ளது. இதை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ஒரு வழக்கறிஞர் வெளிக் கொணர்ந்துள்ளார். உண்மையில் கோல்கேட் நிறுவனம் கடந்த 1997 இல் இந்த வேதிப் பொருளை பயன்படுத்த அனுமதி கோரியபோது உணவு மற்றும் மருந்துக் கழகத்தில் இடம் பெற்றுள்ள பலரும் இது ஆபத்தானது என்று ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். 

ஆனால் கோல்கேட் தாக்கல் செய்த ஆய்வறிக்கையிலோ, அதிக அளவில் இந்த வேதிப் பொருளை பயன்படுத்தினால்தான் ஆபத்து என்று வாதிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்விலுலும் டிரைக்ளோசன் அபயகரமான ஒரு வேதிப் பொருள், புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பற்களில் பாக்டீரியாக்களால் ஏற்படும் பாதிப்பை தடுத்து நிறுத்தவே டிரைக்ளோசன் பயன்படுத்தப்படுகிறது. 

ஆனால் இது புற்றுநோயை ஏற்படுத்தும் முக்கிய வேதிப் பொருட்களில் ஒன்று என்று 2010 இல் நடந்த ஆய்விலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதாகவும் 2013 இல் நடந்த ஆய்வு ஒன்று கண்டுபிடித்துள்ளது. ஆனால் இதுதொடர்பாக நடந்த சோதனைகள் அனைத்தும் விலங்குகள் மீது நடத்தப்பட்டவையாகும். 

ஆனால் நாங்கள் மனிதர்களிடம் சோதனை நடத்திய பிறகே இந்த வேதிப் பொருளை பயன்படுத்த முடிவு செய்தோம் என்று கோல்கேட் விளக்கம் அளிக்கிறது.மேலும் இந்த வேதிப் பொருளை நிறுத்துவது குறித்து எந்தத் திட்டமும் தங்களிடம் இல்லை என்றும் கோல்கேட் கூறியுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு உணவுப் பொருளில் டிரைக்ளோசனை சேர்ப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது என்பது நினைவிருக்கலாம்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top