Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



100 அணுகுண்டுகள் பூமியில் வெடித்தால் என்னவாகும்.?

100 அணுகுண்டுகள் பூமியில் வெடித்தால் என்னவாகும்.?

உலகில் மீண்டும் அணு ஆயுதப்போர் வந்தால் பஞ்சமும் குளிர்க்கால நிலையும் பூமியை சூழ்ந்துவிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்க பல்கலைக்கழகமான கோலாராடோவின் ஆய்வு குழுவினர் கணிணி மூலம் 100 அணுக்குண்டுகள் பூமியில் வெடித்தால் என்னவாகும் என்பது குறித்து ஆராச்சி செய்துள்ளனர். 

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது, உலகில் மீண்டும் ஆணு ஆயுத யுத்தம் வெடித்தால் சுமார் 20 ஆண்டுகளுக்கு பஞ்சம் தலைவரித்தாடும், வெப்பநிலையும் தணிந்து உலகமே குளிர் மண்டலமாகி உறைந்துவிடும். இந்த போரினால் பலக்கோடிக்கணக்கான மக்கள் பலியாகியானால் எங்கும் புல் பூண்டே முளைக்காது.எனவே பயிரிட முடியாத நிலை ஏற்படும். 

மேலும் அணு குண்டுகள் வெடிக்கும்போது கருப்பு கார்பன் வெளியேறுவதால் அது சூரிய ஒளியை உறிஞ்சி எடுத்துக் கொள்ளும். இதனால் மழையும் பெய்யாமல், ஓசோன் படலமும் சேதமடைந்து மக்களுக்கு புற்றுநோய் வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டாகும் என தெரிவித்துள்ளனர்......! 




உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top