Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ரம்ஜான் நோன்பு இருந்த ஊழியரை அவமதித்த எம்.பி.. (வீடியோ)

ரம்ஜான் நோன்பு இருந்த ஊழியரை அவமதித்த எம்.பி.. (வீடியோ)

ரம்ஜான் நோன்பு இருக்கும் இஸ்லாமிய ரயில்வே ஊழியர் ஒருவர் வாயில் சப்பாத்தியை திணித்ததாக எம்.பி அரவிந்த் சாவந்த் மீது சர்ச்சை எழுந்துள்ளது. டெல்லியில் உள்ள மராட்டிய பவனில், எம்.பிக்களுக்கு சாப்பாடு வழங்கும் பொறுப்பை இந்திய ரயில்வே துணை அமைப்பான ஐஆர்சிடிசி ஏற்றுள்ளது. சம்பவத்தன்று சிவசேனை கட்சியை சேர்ந்த அரவிந்த் சாவந்த் உட்பட 11 எம்.பிக்கள் சாப்பிடுவதற்காக மராட்டிய பவன் சென்றுள்ளனர். 

அங்கு பரிமாறப்பட்ட உணவில் மகாராஷ்டிர பாரம்பரிய உணவுகள் இல்லாததால் கோபமடைந்த அரவிந்த் சாவந்த் உள்ளிட்ட 11 எம்.பிக்களும் சமையலறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அங்கு மேற்பார்வையாளரான அர்ஷத்திடம் சென்ற அரவிந்த் சாவந்த், ஒரு சப்பாத்தியை பிய்த்து, இதை எங்களுக்கு அளித்துள்ளீர்களே, நீங்கள் சாப்பிடுவீர்களா? என்று வாய்க்குள் திணிக்க முற்பட்டபோது அர்ஷத், அந்த எம்.பி கையை தட்டிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அருகில் இருந்த மற்ற ஊழியர்கள், அர்ஷத் ஒரு முஸ்லிம் என்றும் அவர் ரம்ஜான் நோன்பு இருக்கிறார் எனவும் கூறியுள்ளனர். பிறகு எம்.பி மற்றும் அவருடன் வந்தவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்நிலையில் அர்ஷத் இந்த விவகாரத்தையொட்டி அளித்துள்ள புகாரில் எனது சீருடை சட்டை பேட்ஜில் அர்ஷத் என்ற பெயர் இருந்தது. 

இதை பார்த்தால் நான் இஸ்லாமியர் என்பது எம்.பி.க்கு தெரிந்திருக்கும். ரம்ஜான் நோன்பு இருக்கும் நேரத்தில் எனது வாயில் சப்பாத்தியை எம்.பி திணித்தது, மனவேதனையை உண்டாக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனிடையே அரவிந்த் சாவந்த் கூறுகையில், ஐஆர்சிடிசி அளித்த உணவு தரமில்லாமல் இருந்தது அதுகுறித்து தட்டிக்கேட்க சமையலறைக்கு சென்றேன் மற்றபடி மத உணர்வுகளை புண்படுத்துவது நோக்கம் இல்லை என்று தெரிவித்துள்ளார்....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top