Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இந்திய சடங்குகளில் மறைத்திருக்கும் விஞ்ஞானம்..!! (ஆச்சரிய தகவல்)

இந்திய சடங்குகளில் மறைத்திருக்கும் விஞ்ஞானம்.. (ஆச்சரிய தகவல்)

இந்தியர்களின் பழங்கால மரபுகளுக்கு பின்னால் உள்ள அற்புதமான விஞ்ஞான காரணங்கள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு சடங்குகளுக்கு பின்னால் இருக்கும் காரணங்களை தெரிந்து கொள்வதில் அவ்வளவு சுவாரசியம் உண்டாகும். 

இன்றைய நவீன உலகத்தில் பல சடங்குகளை நம்மில் பலரும் மூட நம்பிக்கை என கூறி ஒதுக்கி வைத்து விடுகிறோம். ஆனால் அவைகள் எல்லாம் பழங்காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருபவைகளாகும். ஆனால் இவை அனைத்தும் மூட நம்பிக்கைகளா? இதற்கான விடை உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும் வாங்க பார்க்கலாம்.....

நமஸ்காரம்..

நமஸ்காரம் செய்வது இந்தியர்களின் உன்னதமான சைகையாகும். பொதுவாக இதை மரியாதை அளிக்கும் சைகையாக பார்க்கிறனர். ஆனால், நமஸ்காரம் செய்யும் போது, இரண்டு கைகளையும் ஒன்று சேர்க்கும் போது, உங்களின் விரல் நுனிகள் அனைத்தும் ஒன்று சேரும். அவைகள் ஒன்றாக அழுத்தும் போது ப்ரெஷர் புள்ளிகள் செயல்பட தொடங்கும். இதனால் அந்த நபரை நீண்ட நாட்களுக்கு மறக்காமல் இருக்க செய்யும். 

மெட்டி..

திருமணமான இந்திய பெண்கள் மெட்டி அணிவது வாடிக்கையான ஒன்றே. அது வெறும் அலங்காரத்திற்கு மட்டுமில்லை. பொதுவாக பெருவிரலுக்கு அடுத்த விரலில் தான் பெண்கள் மெட்டி அணிவார்கள். இந்த விரலில் இருந்து செல்லும் நரம்பு கர்ப்பப்பை மற்றும் இதயத்திற்கு நேரடியாக செல்கிறது. இரண்டாம் விரலில் மெட்டி அணிவதால் கர்ப்பப்பை வலுவடைந்து, மாதவிடாய் இரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவும்.

கொலுசு அணிதல்..

உணர்ச்சி வசப்படுதல் என்பது எப்பொழுதும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மேலும் பெண்களின் இடுப்பு பகுதியை ஸ்திரப் படுத்தவும் கொலுசு பயன்படுகிறது. 

உணவருந்திய பின் இனிப்பு..

உண்ணுவது இந்தியாவில் காரசாரமான பதார்த்தங்களோடு ஆரம்பிக்கும் உணவு, இனிப்பு பண்டங்களுடன் முடிவடையும். அதற்கு காரணம் செரிமான அமைப்பு மற்றும் அமிலங்களை செயல்படுத்த செய்வது காரசாரமான உணவுகள். இந்த செயற்பாட்டை குறைத்திடும் இனிப்புகள். அதனால் உணவருந்திய பிறகு இனிப்புகள் உண்ண பரிந்துரைக்கப்படுகிறது. 

கைகளில் மருதாணி வைப்பது..

அலங்கார காரணத்தை தவிர, மருதாணி என்பது சக்தி வாய்ந்த மருத்துவ மூலிகையாகும். திருமணங்கள் என்பது அழுத்தத்தை உண்டாக்கும், குறிப்பாக மணப்பெண்ணுக்கு. மருதாணி தடவிக் கொண்டால், நரம்புகளை குளிரச் செய்யும். அதற்கு காரணம் குளிரச் செய்யும் குணங்களை கொண்டுள்ளது மருதாணி. அதனால் தான் மணப்பெண்ணின் கைகளிலும் கால்களிலும் மருதாணி தடவப்படுகிறது.

மோதிரவிரலில் அணிய காரணம்..

மோதிர விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக்கோளாறுகள் மற்றும் வயிறுகோளாறுகள் என்பவை நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணிதல் தடுக்கபடுகிறது ஏன் என்றால் இதய கோளாறுகள் ஏற்படும்.  

தரையில் அமர்ந்து உண்ணுவது..

நாம் தரையில் அமரும் போது சுகாசன் தோரணையில் அமர்கிறோம். இந்த தோரணை செரிமானத்தை மேம்படுத்தும். அதனால் நாம் சுகாசன் தோரணையில் அமரும் போது நம் உணவு சுலபமாக செரிமானமடையும்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top