Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



கற்பழித்தவனிடம் 1 லட்சம் வாங்கி கொண்டு சமரசம் செய்த இளம்பெண்..

கற்பழித்தவனிடம் 1 லட்சம் வாங்கி கொண்டு சமரசம் செய்த இளம்பெண்..

சேலம் மாவட்டத்தில் ஒரு வாலிபரால் கற்பழிக்கப்பட்ட இளம்பெண், கற்பழித்தவரிடமே ரூ. 1லட்சம் பெற்று கொண்டு சமரசம் செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மங்கிய கரை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும், 21 வயது இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறிய மணிகண்டன் அந்த பெண்ணுடன் உடல் தொடர்பு வைத்துள்ளார். 

ஆனால் அவர் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததால் அந்த பெண் புகார் செய்ததையடுத்து இளம்பெண்ணை கற்பழித்ததாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். சேலம் மகிளா நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் கடந்த ஆண்டு மணிகண்டனுக்கு கற்பழிப்பு குற்றத்துக்காக 10 ஆண்டு சிறைத்தண்டனை, 5ஆயிரம் அபராதம், மேலும் திருமணம் செய்வதாக ஏமாற்றிய குற்றத்துக்காக 3 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. 

இதையடுத்து மணிகண்டன் 8 மாதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த தண்டனையை எதிர்த்து மணிகண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் அதேவேளையில், வாலிபரால் கற்பழிக்கப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண் தாக்கல் செய்த பதில் மனுவில், 

நான் தற்போது வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். தன்னுடன் உடல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக என்னிடம் மன்னிப்பு கேட்ட மணிகண்டன் அதற்கு நிவாரணமாக ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். எனவே நாங்கள் இருவரும் சமரசமாக செல்ல விரும்புகிறோம் என்றும், அவர் மீது மேல் நடவடிக்கை எதுவும் தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

அதேபோல மணிகண்டனும், இந்த வழக்கில் இருவரும் சமரசமாகிவிட்டதால் தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தனது தீர்ப்பில் திருமணம் செய்து கொள்வதாக உத்தரவாதம் கொடுத்து உடல் ரீதியான தொடர்பு வைத்துக் கொள்வது கற்பழிப்பு குற்றமாகாது. மேலும் இந்த வழக்கில் இருவரும் சமரசமாகிவிட்டதால், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top