Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பெண்கள் பிரசவ காலத்தை கணக்கிடுவது எப்படி.?

பெண்கள் பிரசவ காலத்தை கணக்கிடுவது எப்படி.?

கர்ப்பகாலம் என்பது இருபத்தியெட்டு நாட்கள் மாததீட்டு சுற்று இருக்க கூடிய பெண்ணுக்கு கடைசி மாதவிடாய் தேதியிலிருந்து 280 நாட்கள் எனவும். கரு உற்பத்தி ஆனலிருந்து 266 நாட்கள் எனவும் கணக்கிடப்பட்டிருக்கிறது. குழந்தை பிரசவம் ஆவதைக் கணக்கிட ஒரு சாதாரண ‘சூத்திரம்’ இருக்கிறது. அதாவது கடைசி மாதவிடாயின் முதல் நாளிலிருந்து ஏழு நாட்களைக் கூட்டிய பின் மூன்று மாதங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

உதாரணத்திற்கு....., 

கடைசி மாத்தீட்டு ஜூன் மாதம் முதல் தேதியில் ஆரம்பித்திருந்தால் அதோடு ஏழு நாட்களைக் கூட்டினால் ஜூன் எட்டாம் தேதி வரும். அதிலிருந்து மூன்று மாதங்கள் பின்னோக்கிச் சென்றால் மார்ச் மாதம் வரும். ஆக குழந்தை பிரசவிப்பதை நாம் தோராயமாக ‘மார்ச் எட்டாம் தேதி’ எனக் கணக்கில் கொள்ளலாம். ஒரு சிறு சதவீத தாய்மார்களே அந்தக் கணக்கிடப்பட்ட தேதியில் பிரசவிப்பார்கள். 

அறுபது சதவித தாய்மார்கள் கணக்கிடப்பட்ட தேதியில் ஒரு வாரம் முன்னரோ அல்லது பின்னரோ பிரசவிப்பார்கள்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top