Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



மோடியின் கனவு திட்டம் ''ஸ்மார்ட் சிட்டி'' என்பது என்ன தெரியுமா.?

மோடியின் கனவு திட்டம் ஸ்மார்ட் சிட்டின்னா என்னன்னு தெரியுமா.?

மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று நாடு முழுவதும் ஸ்மார்ட் நகரங்களை அமைப்பது.தன்னுடைய தேர்தல் பிரச்சாரங்களிலும் இதைப் பற்றி அடிக்கடி பேசியுள்ளார்.இப்போது ஸ்மார்ட் சிட்டிகளை கட்டி தர சிங்கப்பூர் முன் வந்துள்ளது.திடமான மற்றும் பலமான இந்தியா அமைந்தால் ஆசியாவில் அமைதி நிலைத்து இருக்க வாய்ப்பு இருப்பதாக கருதி அவர்கள் ஸ்மார்ட் சிட்டி அமைக்க முன் வந்துள்ளனர்.

மோடியின் கனவு திட்டமாக நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிகள் அமைப்பதில் முதல் கட்டமாக டில்லி மற்றும் மும்பை இடையில் 7 ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்க உள்ளனர்.2019 ஆம் ஆண்டு முடிவில் டோலேரா ,ஷென்ட்ரா-பிகின்,குளோபல் சிட்டி என மூன்று ஸ்மார்ட் சிட்டிகள் உருவாகி இருக்கும் . 

ஸ்மார்ட் சிட்டி என்றால் என்ன ?? 

இந்த ஸ்மார்ட் சிட்டிகளில் மின்சார கிரிட்களில் இருந்து சாக்கடை செல்லும் பைப்புகள் வரை அனைத்தும் ஒரு நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு இருக்கும்.கேமராக்கள்,வயர்லெஸ் கருவிகள்,தகவல் மையங்கள் என ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருக்கும் . இதன் மூலம் நீங்கள் ஒரு விளக்கை அணைக்க மறந்துவிட்டாலும் உங்களின் கட்டிடம் உங்களுக்கு அந்த வேலையை செய்து முடிக்கும்.

உங்கள் கார்கள் உங்களுக்கு டிராபிக் இல்லாத இடமாக பார்த்து பார்க் செய்திட உதவும்.இந்த ஸ்மார்ட் சிட்டிகளில் பல முன்னனி நிறுவனங்கள் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க பல சாப்ட்வேர்களை உருவாக்கி கொண்டே இருப்பர். இப்போது முன்னனி நிறுவனமான ஐ.பி.எம். பல இடங்களில் ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்க உதவ முன்வந்துள்ளது.

இந்த ஐ.பி.எம் நிறுவனம் சிங்கப்பூர் கலிபோர்னியா ஆகிய இடங்களில் உள்ள வண்டிகளின் எண்ணிக்கையை குறித்து வைத்து எந்த இடத்தில் டிராபிக் ஜாம் ஆக போகிறது என முன் கூட்டியே கணித்து விடும். அதற்கேற்ப அனைத்து பணிகளும் மாற்றி டிராபிக் ஜாம் இல்லாமல் செய்து விடுவர். மேலும் தண்ணீர் எல்லாம் ஸ்மார்ட் மீட்டர் மூலம் கணக்கிடப்படும். இதன்மூலம் பயனாளர்கள் தங்களின் தண்ணீர் பயனீட்டு அளவை அவர்களே பார்த்துக் கொள்வர். 

மேலும் அதை மற்ற மக்களின் பயன்பாட்டு அளவுடன் ஒப்பிட்டு கொள்ளலாம். மேலும் இந்த நகரங்களில் மக்கள் உதவியின் மூலம் பிரச்சனைகளை கண்டறிந்து தீர்க்க பல தொழில்நுட்பங்களை அமைப்பர். மேலும் கழிவுகள் அனைத்தும் ஓரே குழாய் வழியாக இணைக்கப்பட்டு மொத்தமாக சுத்திகரிக்கப்படும். 

ஸ்மார்ட் சிட்டி எங்கே உள்ளது அதன் பயன் என்ன ?? 

சீனாவில் டியான்ஜின் எகோ சிட்டி ,சுஃஷோ , குயங்க்ஷோ , ஸ்செகுசான் ஆகிய 4 இடங்களில் ஸ்மார்ட் சிட்டி உள்ளது.இந்தியாவில் அஹமதாபாத் விமான நிலையம் அருகில் உள்ள கிப்ட்(GIFT) என்பது தான் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் சிட்டி ஆக இருக்கும் .70,000 ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்த திட்டத்தில் 886 ஏக்கரில் செயல்படுத்த உள்ளனர்.இதற்கான கட்டுமாண பணி 2011 ஆம் தொடங்கியது.இந்த பணிகள் முடிய பத்து வருடங்கள் ஆகும்...!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top