Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



தலையில் திட்டுத்திட்டாக வழுக்கை விழுகிறதா.?

தலையில் புழுவெட்டால் திட்டுத்திட்டாக வழுக்கை தெரிகிறதா.?

*வீட்டில் எப்போதும் மிளகுத்ததூள் வைத்திருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும் வயிறு முட்ட சாப்பிட்ட போதும் வெருகடி அளவு மிளகுத்தூளை மோரில் கலந்து குடிக்க உடன் சீரணமாகும். 

*தும்மல், ஜலதோஷம் கண்டபோது 10 கிராம் மிளகுத் தூளோடு சிறிது மஞ்சள் தூளும் சேர்த்து பாலில் இட்டு கொதிக்க வைத்துக் குடிக்க இரண்டொரு நாட்களில் தும்மலும், ஜலதோஷமும் காணாது போகும். 

*மிளகுத்தூள் 10 கிராம், எருக்கன்வேர் 18 கிராம் எடுத்து அத்துடன் பனைவெல்லம் போதிய அளவு சேர்த்து அரைத்து தினை அளவு மாத்திரைகளாகச் செய்து வைத்துக்கொண்டு தினம் இருவேளை ஒரு மாத்திரை என உண்ணுகையில் கொருக்கு நோய் என்னும் ஆண் குறியைச் சுற்றி வந்த பால்வினை நோய்க் கொப்புளங்கள் குணமாகும். 

*இரண்டு வெற்றிலையோடு 7-8 மிளகு சேர்த்து உண்ண பூச்சுக்கடியினால் வந்த தோலைப் பாதிக்கும் நச்சு (டாக்ஸின்) வெளியேறும். 

*அரைஸ்பூன் மிளகுத்தூளை சுடுநீரிலிட்டுப் போதிய பனைவெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட காய்ச்சல் தணியும். 

*5-6 வேப்பிலையை நீரிலிட்டு கொதிக்க வைத்து சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டாலும் காய்ச்சல் தணியும். 

*மிளகுத்தூளை நீரிலிட்டு அத்துடன் போதிய வெல்லமும் சிறிது உப்பும் சேர்த்து கொதிக்க வைத்துக் குடிக்க வயிற்றுவலி குணமாகும். 

*50 கிராம் மிளகோடு 70 கிராம் சோம்பு சேர்த்துப் பொடித்து வைத்துக்கொண்டு அத்துடன் 350 கிராம் தேன் சேர்த்து லேகியபதமாகக் கிண்டி வைத்துக் கொண்டு தினம் இருவேளை சுழற்சிக்காய் அளவு உள்ளுக்கு சாப்பிட்டு வர மூல நோய் முற்றிலும் மறையும். 

*மிளகுத்தூளோடு போதிய அளவு உப்பு சேர்த்து பல்துலக்கிவர சிலநாட்களில் பல் சொத்தை, பல் வலி, வாய்துர்நாற்றம், பல் கூச்சம் ஆகியவற்றினின்று நிவாரணம் கிடைக்கும். 

*ஆண் அல்லது பெண் மலடு என்று எதுவாக இருப்பினும் தினம் நான்கு பாதாம் பருப்போடு ஆறு மிளகைத் தூளாக்கி சேர்த்து பாலோடு சேர்த்து குடித்து வருவதால் மலட்டுத் தன்மை நீங்கி பிள்ளைப்பேறு உண்டாகும். 

*தலையில் மயிர்ப்புழுவெட்டு என்னும் நோயால் கொத்துக் கொத்தாக முடி கொட்டி அந்த இடங்களில் திட்டுத் திட்டாக வழுக்கைத் தலைபோல் தோற்றம் தரும். அப்போது மிளகுத்தூளோடு வெங்காயம் சிறிது உப்பு சேர்த்து அரைத்து வந்த விழுதை புழுவெட்டு வந்த இடத்தில் வைத்து சிறிது அழுத்தித் தேய்த்து வர விரைவில் துன்பம் தொலைந்து கருமையான முடி வளரும்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top