அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு வித்தியாசமான அலர்ஜி இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது விந்தனு அலர்ஜி. இதனால் இயல்பான முறையில் உறவு வைத்துக் கொள்ள முடியாமல் இந்தப் பெண் தவித்து வருகிறார். தற்போது ஆணுறை அணிந்தபடிதான் இவரது கணவர் உறவில் ஈடுபடுகிறாராம். இவரது உடம்புக்குள் விந்தனு போனால் உடனடியாக இவரது உடம்பெல்லாம் தடிப்பு ஏற்பட்டு விடுகிறது.
உடம்பில் எரிச்சல் ஏற்படுகிறது. மூச்சு விட முடியாமல் திணறிப் போய் விடுகிறார். மிகவும் அரிய வகை அலர்ஜி இது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் டிஎல்சி டிவியில் சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பாகும் Sex Sent Me To The E.R.என்ற நிகழ்ச்சியில் இவரது கதை ஒளிபரப்பாகியுள்ளது.
சில பெண்களுக்கு கணவர் என்றாலே அலர்ஜியாகி விடும்.
ஆனால் கிறிஸ்டின் என்ற பெயர் கொண்ட இந்த அமெரிக்கப் பெண்ணுக்கோ அவரது கணவர் சீன் என்றால் உயிர். ஆனால் அவரது உயிரணுதான் இவருக்குப் பெரும் பிரச்சினையாகியுள்ளது. சீன் - கிறிஸ்டின் தம்பதிக்கு மகன் பிறந்ததுமே கிறிஸ்டின் உடலில் நிறைய மாற்றம் தென்பட்டது.
அவருக்கு ஏகப்பட்ட அலர்ஜிகள் வந்து சேர்ந்தன. உடலுறவு கொள்வதால்தான் இவை ஏற்படுகிறது என்று தெரிந்ததும், கிட்டத்தட்ட ஒரு வருடமாக உடலுறவையே நிறுத்தி விட்டனர்.
இந்த நிலையில் கணவரின் பிறந்த நாளன்று அவருக்கு செக்ஸையே பரிசாக கொடுத்து சந்தோஷிக்க முடிவு செய்தார் கிறிஸ்டின். அதை அறிந்து சீனும் குஷியில் மூழ்கினார்.
ஆனால் அதன் பிறகுதான் வினையே வந்தது.எல்லாம் நல்லபடியாக போனது. உறவு கொண்டு வழக்கமாக எல்லோரும் களைத்து படுக்கையில் விழுவார்கள். ஆனால் கிறிஸ்டினுக்கோ எதிர்மாறாக நடந்தது. அவரது உடம்பெல்லாம் வீங்கி தடிப்பு தடிப்பாக காணப்பட்டது. உடம்பெல்லாம் ரத்தச் சிவப்பாக மாறி தகிக்கத் தொடங்கியது. மூச்சு விட முடியவி்ல்லை.
உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.அங்கு கிறிஸ்டினைப் பரிசோதித்த டாக்டர்கள், சீனின் விந்தனுவால் ஏற்பட்ட அலர்ஜியால் கிறிஸ்டின் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிந்தனர்.
அதாவது பிரசவத்தின்போது கிறிஸ்டினுக்கு, seminal plasma hypersensitivity என்ற பிரச்சினை உருவாகியுள்ளது. இது சீனின் விந்தனுவால் ஏற்பட்ட அலர்ஜியாகும்.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், இது மிகவும் அரிய வகை அலர்ஜியாகும். பிரசவத்தின்போது பெண்களுக்கு ஏதாவது ஒரு வகை புதிய அலர்ஜென்களால் அலர்ஜி உண்டாகும். அதன் பிறகு அந்த அலர்ஜென்கள் அவர்களைத் தாக்கும்போதெல்லாம் அந்த அலர்ஜி உருவாகும். கிறிஸ்டினுக்கு விந்தனுவால் அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது.
கிறிஸ்டின் செக்ஸ் வாழ்க்கையில் வழக்கம் போல ஈடுபடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மாறாக அவரது கணவர் தவறாமல் ஆணுறையைப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அலர்ஜியிலருந்து தப்பலாம் என்றனர். எப்படியோ செக்ஸ் பிரச்சினையில்லை என்பதை உறுதி செய்து கொண்ட சீன், கிறிஸ்டின் தம்பதி தற்போது வீ்ட்டில் ஆணுறைகளை நிறையவே ஸ்டாக் வைத்துக் கொண்டுள்ளனராம்....!