Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



6 வயது சிறுமியை சீரழித்த காமூகர்கள்;பள்ளியிலேயே அரங்கேறிய கொடூரம்!.

6 வயது சிறுமியை சீரழித்த காமூகர்கள்;பள்ளியிலேயே அரங்கேறிய கொடூரம்!.

பெங்களுரில் பள்ளி வளாகத்திலேயே 6 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் மாரத்தஹள்ளி பகுதியில், உள்ளது விப்ஜியார் என்ற பள்ளியில் பொறியாளர் ஒருவரின் மகள் முதலாம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இச்சிறுமி தனது மர்ம உறுப்பில் மிகுந்த வலியாக உள்ளது என பெற்றோரிடம் கூறிய சிறுமியை மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளார். 

அப்போது சிறுமி கற்பழிக்கப்பட்டது பெற்றோருக்கு தெரியவந்தால், சிறுமியின் பெற்றோர் போலிசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் பள்ளிக்கு விரைந்து வந்த போலிசார் நடந்த சம்பவம் குறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதற்கு, பள்ளியை சேர்ந்த இருவர்தான் இதுபோல செய்ததாக சிறுமி கூறியுள்ளார்.

எனினும் அவர்களது பெயர் குறித்து சிறுமிக்கு தெரியவில்லை. ஆனால் சிறுமி கூறிய அடையாளயங்களை வைத்து பார்க்கும்போது அது அப்பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியரையும், பள்ளி காவலாளியையும் தான் ஒத்துப்போகிறது என்றாலும் இவ்விசயம் குறித்து உறுதியாக முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. 

இந்நிலையில் மகளுக்கு நேர்ந்த அவலத்தை சகித்துக் கொள்ள முடியாத பெற்றோர் அவளது பெற்றோர் பலருடன் பள்ளி முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த நாற்காலி மேசைகளை தூக்கி வீசி நெருக்கித் தள்ளியுள்ளனர். இதனால் பள்ளியின் முதல்வர் பள்ளிக்கு விடுமுறை விடுத்துள்ளார்....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top