Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ராமாயாண நாயகன் ராமர் எப்படி இறந்தார் தெரியுமா.?

ராமாயாண நாயகன் ராமர் எப்படி இறந்தார் தெரியுமா.?

ராமபிரானை பற்றி பல விஷயங்களும் அவர் கடந்து வந்த சோதனைகளை பற்றியும் நமக்கு தெரிந்திருந்தாலும், ராமபிரான் எப்படி இறந்தார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்து மதத்தில் ராமபிரான் விஷ்ணு பகவானின் அவதாரமாக வர்ணிக்கப்பட்டுள்ளார். விஷ்ணு பகவானின் அவதாரங்கள் சாதாரண, மனித வழியில் இறப்பை சந்திக்காது. ராமபிரான் தானாக முன் வந்து சராயு நதியில் இறங்கி வைகுண்டத்தை அடைந்தார் என சிலர் நம்புகின்றனர். 

ராமபிரானின் இறப்பை விளக்க பத்மபுராணம் முயற்சி செய்துள்ளது. அதனை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். ராமபிரான் 11,000 ஆண்டு காலமாக ஆட்சி புரிந்தார் என நம்பப்படுகிறது. தர்மத்தை நிலைநாட்டி உண்மையான சந்தோஷத்திற்கான பாதையை மக்களுக்கு வழிகாட்டுவது அவரின் குறிக்கோளாக விளங்கியது. அவர் ஆட்சி காலத்திற்கு பிறகு, அவர் புதல்வர்களான லவாவும் குசாவும் அவர்களின் தந்தையை போல் அதே குறிக்கோளுடன் ஆட்சி புரிந்தார்கள். 

அவருடைய ஆட்சி காலம் முடிவடைந்த போது, ராமபிரானின் மனைவியான சீதா தேவியை பூமா தேவி மீண்டும் பூமிக்கு அடியில் அழைத்து சென்று விட்டார் என நம்பப்படுகிறது. இப்போது கூறப்போவது உங்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கும். ஒரு முறை, ராமபிரானை சந்திக்க வந்த ஒரு முனிவர், அவரிடம் தனிமையில் உரையாட வேண்டும் என கேட்டுக் கொண்டார். அந்த முனிவருடன் ஒரு அறைக்கு சென்ற ராமர், லட்சுமணனை அந்த கதவுக்கு காவல் இருக்க சொன்னார். 

மேலும் எந்த ஒரு ஆத்மாவையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். ராமபிரான் அந்த முனிவருடன் பேச சென்றதே அவருடைய கடைசி தருணம் என நம்பப்படுகிறது. அந்த முனிவர் வேறு யாருமின்றி, 'காலமாகும்'. இந்த உலகத்தில் ராமபிரான் ஆற்ற வேண்டிய கடமை முடிவடைந்து விட்டதால், அவர் வைகுண்டத்திற்கு வர வேண்டிய நேரம் வந்து விட்டது என அந்த முனிவர் ராமரிடம் கூறினார். அவர் தெய்வீக குளத்தை சேர்ந்தவர் என்றும் ராமரிடம் அந்த முனிவர் கூறினார். 

இந்த தருணத்தில் முன் கோபத்திற்கு பெயர் பெற்ற துர்வாசா முனிவர் ராமரை சந்திக்க விரும்பினார். லட்சுமணர் அனுமதிக்காததால் அயோத்யா நகரத்தின் மீது சாபம் விடுவதாக எச்சரித்தார். அயோத்யா மக்களை காக்க வேண்டி, தன் உயிர் ஆபத்தில் இருந்தாலும், துர்வாசா முனிவரை உள்ளே செல்ல அனுமதி அளித்தார் லட்சுமணன். அயோத்யாவை காப்பாற்ற தண்டனையை ஏற்று மரணத்தை தழுவ முன் வந்தார். 

அப்போது காலத்தின் பாத்திரத்தை ஏற்றுக் கொண்டு அந்த அறைக்குள் லட்சுமணரை செல்ல சொன்னார் துர்வாசா. அதனை உடனடியாக ஏற்றுக் கொண்ட லட்சுமணர் அந்த வடிவத்தை எடுத்தார். தன் தம்பியின் நோக்கம் நிறைவேறியதை அறிந்த ராமர், சராயு நதியில் இறங்க முடிவெடுத்து தன் அவதாரத்தை முடித்துக் கொண்டார்.....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top