Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


முஸ்லீம்கள் மீது சிங்களக் கொலை வெறித் தாக்குதல்.. பரபரப்பு வீடியோ!.

முஸ்லீம்கள் மீது சிங்களக் கொலை வெறித் தாக்குதல்.. பரபரப்பு வீடியோ!.

இலங்கையில் முஸ்லீம் சமுதாயத்தினர் மீது சிங்களக் கும்பல் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதும், மசூதி, வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்தியதும் வீடியோ காட்சிகளாக தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகளில் முகங்களை துணியால் மூடியபடி சிங்கள இனவெறியர்கள் தாக்குவதும், பொருட்களை சூறையாடுவதும், வணிக வளாக பணியாளர்களை தாக்குவதும் இடம் பெற்றுள்ளது. 

மேலும் இஸ்லாமியர் ஒருவரின் கடைக்குள் புகுந்து பெட்ரோல் குண்டுகளை வீசி அதை சேதப்படுத்தும் காட்சியும் உள்ளது. பொது பல சேனா என்ற புத்த வெறி அமைப்பைச் சேர்ந்த சிங்களர்கள் தான் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர். தமிழர்களை நிராயுதபாணிகளாக மாற்றி விட்ட நிலையில் தற்போது தமிழ் பேசும் இஸ்லாமியர்களை சிங்களர்கள் குறி வைத்துத் தாக்குதலில் குதித்துள்ளனர்......!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top