Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பல்லில் உள்ள கறை நீங்க வீட்டிலேயே கைமருந்து.. (சிறப்பான 9 டிப்ஸ்)

பல்லில் உள்ள கறை நீங்க வீட்டிலேயே கைமருந்து.. (சிறப்பான 9 டிப்ஸ்)

வெண்மையான பற்கள் வேண்டுமென்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும். அப்படி விரும்புவோர் ஒருசில வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி பற்களை துலக்கினால் பற்களை நன்கு ஆரோக்கியமா,பளிச்சென்று வெண்மையுடனும் மாற்றலாம். கீழே உள்ள தகவலை பயன்படுத்தி முத்து போன்ற பற்களை சில நாட்களில் பெறலாமே.....

*எலுமிச்சை துண்டை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் இயற்கையாக வெண்மையாக இருக்கும்.அதிலும் எலுமிச்சையை உப்பில் தொட்டு தேய்க்க வேண்டும்.

*பற்களை வெள்ளையாக்கும் பாரம்பரிய வீட்டு வைத்திய பொருட்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து துலக்க வேண்டும்.

*பேக்கிங் சோடாவை உப்புடன் சேர்த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையோடு ஜொலிக்கும்.

*அக்காலத்தில் பேஸ்ட் கிடைக்காத நேரத்தில் வாழ்ந்த மக்கள், வீட்டில் விறகு அடுப்பில் சமைக்கும் போது கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்தி பற்களை துலக்கினார்கள். இதனால் பற்கள் வலுவோடும் வெள்ளையாகவும் இருக்கும்.

*அனைவருக்குமே உப்பு பற்களை வெள்ளையாக்கும் பொருட்களில் மிகவும் சிறந்தது என்று. இவற்றை வைத்து பற்களை துலக்கினால் பற்களை வெள்ளையாக மட்டும் மாறாமல், பளிச்சென்றும் மின்னும்.

*ஆரஞ்சு தோல் பற்களுக்கு மிகவும் நல்லது. பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், ஆரஞ்சு பழத்தின் தோல் அல்லது அதன் கூழை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் மின்னுவதோடு, வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.

*தினமும் வினிகரை நீருடன் சேர்த்து கலந்து வாயில் விட்டு கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்கி பற்களில் உள்ள மஞ்சள் நிறக் கறையும் நீங்கும்.

*ஈறுகளில் வலி அல்லது சொத்தை பற்கள் இருப்பவர்களுக்கு கிராம்பு ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதிலும் தினமும் பற்களை துலக்கும் போது, பிரஷ்ஷில் சிறிது கிராம்பு எண்ணெய் ஊற்றி, பின் பேஸ்ட் சேர்த்து தேய்க்க, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

*பற்களை வெண்மையாக்கும் பொருட்களில் வேப்பங்குச்சியும் ஒன்று. இதனை வைத்து தினமும் பற்களை தேய்த்து வந்தால், பற்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு பளிச்சென்றும் மின்னும்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top