Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ரஜினி மகளை மன்னிப்பு கேட்க வைத்த சிம்பு ரசிகர்கள்!.

ரஜினி மகளை மன்னிப்பு கேட்க வைத்த சிம்பு ரசிகர்கள்!.

கோச்சடையான் படத்தில் இயக்குனராக அறிமுகமான நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்திற்கும், நடிகர்  சிம்புவின் சிகர்களுக்கும் கடந்த சில நாட்களாக பரபரப்பான கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. சிம்புவின் ரசிகர்கள் கடுமையான வார்ததைகளால் சௌந்தர்யாவை சமூக வலைத்தளங்களில் திட்டி வருகின்றனர். கோச்சடையான் படத்தைப் பார்த்த பிறகு சிம்பு படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் சரியில்லை என ட்வீட் செய்தார். 

அதற்கு சௌந்தர்யாவும் தங்களது கருத்துக்கு நன்றி என பதிலளித்திருந்தார். இந்த நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் சௌந்தர்யா கலந்து கொண்டார். அப்போது அவரிடம், சிம்பு கிட்ட நீங்க ஒரு பத்திரிகையாளரா இருந்தா என்ன கேப்பீங்க என்று கேட்ட போது, அதற்கு சௌந்தர்யா தயவு செஞ்சு பாடாத சிம்புன்னு கேப்பேன் என பதிலளித்திருந்தார். 

இந்த நிகழ்ச்சி தொடர்பான புரோமோக்கள் கடந்த சில நாட்களாகவே ஒளிபரப்பப்பட்டு வந்ததால் கோபமடைந்த சிம்புவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவர்களது கருத்துக்களைக் காட்டமாக பதிவு செய்து வருகிறார்கள். டிவியில் வரும் குழந்தைகள் நிகழ்ச்சியான சோட்டா பீம் அனிமேஷன் கூட கோச்சடையானை விட சிறப்பாக இருக்கிறது.

இந்நிலையில் சிம்பு பாடக் கூடாது என்று சொன்னதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார் சௌந்தர்யா ரஜினிகாந்த். நாங்கள் இருவரும் சிறு வயதிலிருந்தே நல்ல நண்பர்கள். நான் விளையாட்டுக்குதான் அப்படி கூறினேன். அது உங்களை காயப்படுத்தியிருந்தால் மன்னியுங்கள் என சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top