அமெரிக்காவில் சுற்றுலா சென்ற சிறைச்சாலையில் எடுத்த போட்டோவில் பெண் உருவம் பதிவானதால் தம்பதியினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் உள்ளது அல்கட்ராஸ் தீவு. இந்த தீவில் அல்கட்ராஸ் மத்திய சிறைச்சாலை ஒன்று உள்ளது.
இது பிரபல சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. கடந்த 1934 ஆம் ஆண்டு முதல் 1963 ஆம் ஆண்டு வரை இந்த சிறைச்சாலை இயங்கி வந்தது.
இந்த சிறைக்கு ஷீலா சில்லெரி வால்ஷ் என்ற உதவி ஆசிரியர் தனது கணவர் பால் ரைஸ் உடன் சுற்றுலா சென்றுள்ளார்.
அவர் தன்னிடம் இருந்த ஐபோன் வழியே சிறைச்சாலையில் உள்ள பார்வையாளர்கள் பகுதி வழியே படம் பிடித்துள்ளார். எடுத்த படத்தை பார்த்தபொழுது அதில் ஒரு பெண்ணின் படம் இருந்துள்ளது. இதனால் திகைத்து போன அவர், மறுபடியும் தான் படம் எடுத்த பார்வையாளர் பகுதியை பார்த்துள்ளார்.
ஆனால் அங்கு யாரும் இல்லை. அதிர்ச்சியில் இருந்த ஷீலா தான் எடுத்த புகைப்படத்தை தனது கணவர் ரைசிடம் காட்டியுள்ளார். ஆனால், பேய், பிசாசு மீது நம்பிக்கை இல்லாத ரைஸ் புகைப்படத்தை பார்த்த பின்பு அதில் இருந்த வித்தியாசமான காட்சி அவரது நம்பிக்கையை தகர்த்துள்ளது.
இது குறித்து கூறிய ரைஸ், "முதலில் புகைப்படத்தை பார்த்தபொழுது எனக்கு அது எனது மனைவியின் பிரதிபலிப்பு என தோன்றியது.ஆனால் அந்த பெண்ணின் தலைமுடி மற்றும் உடை ஆகியவை வேறு கால கட்டத்தை சேர்ந்தது. அந்த பெண் 1930 அல்லது 1940 ஆண்டுகளை சேர்ந்தவளாக இருக்ககூடும். படத்தில் இருந்த பெண்ணை குறித்து விளக்கம் தர என்னிடம் ஒன்றும் இல்லை. இது ஆச்சரியம் தருகிறது.
அந்த பெண் தெரிந்த முகம்போன்று கேமிராவை நோக்குகிறாள். பேய் மீது நம்பிக்கை இல்லாதவன் நான். ஆனால், தற்பொழுது சிறிதளவு நம்பிக்கை வருகிறது.இந்த புகைப்படத்தில் இருப்பது பேய் தான் என நான் நினைக்கிறேன்" என ரைஸ் தெரிவித்துள்ளார். இந்த தம்பதியர் புகைப்படத்தில் உள்ள பேய் பெண் குறித்து அறிய முயற்சித்துள்ளனர்.
ஆனால் அந்த சிறையில் பணிபுரிந்த முன்னாள் பணியாளர்களுக்கு அந்த பெண் குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை.சிறையில் பேய்கள் நடமாட்டம் இருப்பதை சிறை அதிகாரிகள் வெளிப்படையாக மறுத்தாலும், முன்னாள் சிறை பாதுகாவலர்களில் பலர் தங்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்....!