Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



''கண் திறந்த அம்மன்'' ஈரோட்டில் குவியும் மக்கள்!.

''கண் திறந்த அம்மன்'' ஈரோட்டில் குவியும் மக்கள்!.

ஈரோடு ஆர்.என்.புதூர் அமராவதி நகரில் மகா கணபதி–முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை அப்பகுதியில் உள்ள மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு 3 கால பூஜைக்காக பூசாரி கோவில் நடையை திறந்தார். பின்னர் அம்மனுக்கு திருமஞ்சன அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. அதே பகுதியை சேர்ந்த கலா, அம்பிகா மற்றும் பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். 

அப்போது கோவிலில் அம்மனின் இடது கண் திறந்து மூடியதை கலா, அம்பிகா ஆகியோர் பார்த்தனர். மேலும் அந்த அதிசயத்தை கோவிலில் உள்ள மற்ற பக்தர்களிடம் கூறினர். இதனால் அவர்களும் அம்மனின் கண் திறந்து மூடியதை கண்டு ஆச்சர்யப்பட்டனர். இந்த தகவல் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு காட்டுத்தீ போல பரவியது. 

இதனால் பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 1 மணி நேரம் அம்மன் கண் திறந்து மூடியதை பார்த்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். இன்று காலையிலும் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்தனர். அம்மனை பயபக்தியுடன் தரிசித்து சென்றனர்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top