Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இன்டர்நெட் இல்லாமல் பேஸ்புக் பயன்படுத்தணுமா.?

இன்டர்நெட் இல்லாமல் இனி பேஸ்புக் பயன்படுத்தலாம்!.

BSNLதன் வாடிக்கையாளர்களுக்குப் புதிய வசதியை அளிக்கிறது. இந்நிறுவனத்தின் மொபைல் இணைப்பு கொண்டிருப்பவர்கள் தங்கள் போன்களில் இணைய இணைப்பு இல்லாமல் இருந்தாலும், பேஸ்புக் தளத்தைத் தொடர்பு கொள்ள முடியும் மூன்று நாட்களுக்கு ரூ.4, வாரத்திற்கு ரூ.10 மற்றும் மாதத்திற்கு ரூ.20 இதற்கென கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

BSNL வாடிக்கையாளர்கள் பேஸ்புக் தளத்தினை தங்கள் அக்கவுண்ட்டில் இணைய இணைப்பு பெறாவிடினும் அணுக முடியும். மெசேஜ்களை அமைக்க காண இயலும். நண்பர்கள் விடுத்துள்ள கேள்வி மற்றும் வேண்டு கோள்களுக்குப் பதில் அளிக்க முடியும். தங்கள் நண்பர்களின் பக்கங்களில் தகவல்கள, செய்திகளை எழுத முடியும். பிறந்த நாள் வாழ்த்து குறித்த தகவல்களைப் பெற்று, அதற்கேற்ப வாழ்த்துகளை அனுப்ப முடியும். 

இந்த வசதியினை வாடிக்கையாளர்களுக்கு முதல் முதலாக வழங்குவதன் மூலம் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம் என்று இந்நிறுவன இயக்குநர் அனுபம் ஸ்ரீவத்சா தெரிவித்துள்ளார். தங்கள் நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க விரும்பும் பல கோடி மக்களுக்கு இந்த சேவை பெரிய உதவி என்று தெரிவித்தார்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top