Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



வருது புது ஸ்மார்ட்கார்டு இனி ATM போக வேண்டாம் ரேகை வைத்தால் பணம்!.

வருது புது ஸ்மார்ட் கார்டு இனி ATM போக வேண்டாம்..ரேகை வைத்தால் பணம்!.

ஏடிஎம் கார்டு...கிரெடிட் கார்டு எதுவாக இருந்தாலும் தில்லுமுல்லுக்கு குறைவில்லை.இதற்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது ரிசர்வ்வங்கி. அது தான் ப்ரீபெய்டு கார்டு மூலம் பணம் எடுக்கும் முறை இதில் ஒரு முக்கிய அம்சம் ரேகை வைத்தால் தான் பணம் கிடைக்கும். கைரேகை பதிவு செய்யும் ‘பயோமெட்ரிக் முறை’யை ஏடிஎம், கிரெடிட் கார்டுக்கு வைக்கும் படி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கூறிவருகிறது.

ஆனால் கைரேகை பதிவுக்கு குறைந்தபட்சம் 20 வினாடி எடுப்பதாலும் நாடு முழுக்க எல்லா இடங்களிலும் கைரேகை பதிவுடன் கூடிய மிஷின்களை வைப்பது சாத்தியமில்லை என்பதாலும் வங்கிகள் தயங்கி வருகின்றன. ப்ரீபெய்டு, இ - வேலட் கார்டு மூலம் ஆன்லைன் ஷாப்பிங், இ டிக்கட் எடுப்பது, கட்டணங்கள், வரிகளை செலுத்துவது போன்றவற்றுக்கு வசதியை சில தனியார் நிறுவனங்கள் செய்து தருகின்றன. 

இந்த கார்டுகள் மூலம் பணம் எடுக்க வழி செய்ய வேண்டும் என்று கூறி வந்தன. ஆனால் ரிசர்வ் வங்கி மறுத்து வந்தது. இந்த நிலையில் பயோமெட்ரிக் முறையில் பணம் எடுக்க பயன்படும் வகையில் ஸ்மார்ட் கார்டு வசதியை அறிமுகம் செய்ய இந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளது. இந்த முறையில் தில்லுமுல்லு வெகுவாக குறைந்து விடும். அப்படி ஒரு நிலை வந்தால் எதிர்காலத்தில் ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டுகள் எல்லாம் கைரேகை பதிவில்லாமல் பயன்படாத நிலை ஏற்படும்.

தற்போது ப்ரீபெய்டு மற்றும் இ -வேலட் கார்டுகளை வெளியிட்டு ஏர்டெல் மணி உட்பட சில நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. இவற்றுக்கு இந்த புதிய ஸ்மார்ட் கார்டு வெளியிடும் வர்த்தகத்துக்கான லைசன்ஸ் தரப்படலாம். இந்த ஸ்மார்ட் கார்டு அமலுக்கு வந்தால் ஏடிஎம் மையத்துக்கு போக வேண்டாம். அந்தந்த கடைகளில் கூட, கார்டை பயன்படுத்தி, கைரேகையை வைத்து பணம் எடுத்து கொள்ளலாம்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top