Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ஒன்றாக பிறந்து ஒன்றாக இறந்த அபூர்வ இரட்டைப் பிறவிகள்!.

ஒன்றாக பிறந்து ஒன்றாக இறந்த அபூர்வ இரட்டைப் பிறவிகள்!.

துருக்கியின் வடக்கு சோமா நகரில் உள்ள தனியார் நிலக்கரி சுரங்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், வெளியில் வர முடியாமல் உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த 301 தொழிலாளர்கள் தீயில் கருகி இறந்தனர். இவர்களின் பிணங்களை சுரங்கத்தினுள் இருந்து மீட்ட மீட்புப் படையினர், உடல் கருகிய நிலையில் கைகோர்த்தபடி உயிரை விட்ட இரட்டைப் பிறவிகளை கண்டு வாயடைத்துப் போயினர். 

சோமா நகரில் உள்ள பயாட் என்ற கிராமத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்களான இஸ்மாயில் மற்றும் சுலைமான் ஆகியோர் ஒரே பிரசவத்தில் பிறந்து ஒன்றாகவே வளர்ந்து, படித்து, பெரியவர்களாயினர். விபத்துக்குள்ளான சுரங்கத்தில் 2003-ல் ஒன்றாகவே வேலைக்கு சேர்ந்த இவர்கள் நான்காண்டுகளுக்கு முன் ஒரே மேடையில் திருமணமும் செய்து கொண்டு இணை பிரியாத அபூர்வ சகோதரர்களாக வலம் வந்தனர். 

துரதிர்ஷ்டவசமான அந்த சுரங்க விபத்து ஏற்பட்ட நாளில் இஸ்மாயிலும், சுலைமானும் ஒரே ஷிப்ட் வேலைக்கு மனைவிமார்களிடம் விடை பெற்று சென்றனர். தீ விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய அவர்கள், உடல் எரிந்து, உயிர் பிரியும் தருவாயில் ஒருவர் கையை மற்றவர் கோர்த்தபடி பிணமாகியுள்ளனர். 

தனது மகன்கள் அற்ப ஆயுளில் பூமியை விட்டு பிரிந்துச் சென்ற வேதனையை தாங்கிக் கொள்ள முடியாத தந்தை, 'ஒரே பிரசவத்தில் அவர்கள் பிறந்த அந்த நாளும், ஒன்றாக பள்ளிக்கு சென்ற முதல் நாளும் என் கண்களில் இருந்து மறையவே இல்லை. அதற்குள் அவர்கள் இருவரையுமே நாங்கள் இழந்து விட்டோம்..' என்று கதறித் துடிக்கிறார்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top