Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இவங்க பேஸ்புக்ல சேர்ந்தா ஸ்டேட்டஸ் எப்படி இருக்கும் தெரியுமா.?

இவங்க பேஸ்புக்ல சேர்ந்தா ஸ்டேட்டஸ் எப்படி இருக்கும் தெரியுமா.?

மனிதர்களின் ஆறாம் விரலாய் மாறிப் போன செல்போன் போல பேஸ்புக்கும் ஆகிவிட்டது. பாத்ரூம் போவதென்றால் கூட சிலர் ஸ்டேட்டஸ் போட்டு விட்டுத் தான் போகிறார்கள். இந்நிலையில் ஐந்தறிவு உயிரினங்களும் பேஸ்புக்கில் இணைந்தால் என்ன மாதிரியான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள்...இதோ ஓர் கற்பனை உலா... 

கரப்பான்பூச்சி 

நல்லவேளை இப்போது தான் ஒரு ஷூ மிதியிலிருந்து தப்பிச்சேன்... என்ன ஒரு போராட்டமான வாழ்க்கை மேன்.... 

பூனை 

எனது 7வது குட்டி கேட்கிறது அதன் அப்பா யார் என்று... என்ன சொல்வது, எனக்குத் தான் நினைவில்லையே... 

பன்றி 

ஓ ஹோஸ்....நான் தான் காய்ச்சலப் பரப்புறேனு வதந்திகளைப் பரப்புறாங்கப்பா இந்த மனிதர்கள்.... 

நாய் 

மச்சி தெக்கு தெருவுல நம்ம டாமிய நம்ம எதிரிங்க கைவச்சிட்டாங்கடா சிக்கிரம் வாங்க நான் அங்க தான் நிக்குறேன்..... 

கோழி

நாளைக்கெல்லாம் என்கிட்ட இருந்து ஸ்டேட்டஸ் எதிர்பார்க்காதீங்க... ஏன்னா, நா நாளைக்கு சிக்கன்65 ஆகியிருப்பேன் கைய்ஸ்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top