Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



கிராமத்தின் மீது மலையே சரிந்தது 2100 பேர் பலி.. ஆப்கானில் பயங்கரம்!.

கிராமத்தின் மீது மலையே சரிந்தது  2100 பேர் பலி..ஆப்கானிஸ்தானில் பயங்கரம்!.

ஆப்கானிஸ்தான் நாட்டின் வட பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2100ஆக அதிகரித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குவியல் குவியலாக பலியானோரின் உடல்கள் மீட்கப்பட்டன. வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பதகசான் என்ற நகரின் அருகே உள்ள பரீக் என்ற கிராமத்தின் அருகேயுள்ள ஒரு சிறிய மலை தொடர்ச்சியாக பெய்த கனமழையின் காரணமாக சரிந்து ஒரு கிராமத்தின் மேல் விழுந்தது. 

இதனால் அந்த கிராமத்தில் இருந்த சுமார் 300 வீடுகள் பூமியில் புதைந்தன. இதில் முதலில் 350 பேர் பலியானதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அங்கு பலியானோர் எண்ணிக்கை 2100ஆக அதிகரித்துள்ளது. நிலச்சரிவில் பரீக் கிராமமே புதைந்து போய் 2,100 பேர் உயிரிழந்த துயர சம்பவத்துக்கு அந்நாட்டின் அதிபர் ஹமீது கர்சாய் தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார். 

நிலச்சரிவில் சிக்கியவர்கள் யாராவது உயிரோடு கிடைத்து விட மாட்டார்களா என்ற ஏக்கத்துடனும், தவிப்புடனும் உள்ளூர் மக்களும் மீட்புப்பணியில் தங்களை இணைத்துக்கொண்டு, மண்வெட்டி கொண்டு இடிபாடுகளை தோண்டிப்பார்ப்பது நெஞ்சை உருக்கும் செயலாக அமைந்துள்ளது....!

 

கிராமத்தின் மீது மலை சரிந்து  2100 பேர் பலி.. ஆப்கானில் பயங்கரம்!.

கிராமத்தின் மீது மலை சரிந்து  2100 பேர் பலி.. ஆப்கானில் பயங்கரம்!.

கிராமத்தின் மீது மலை சரிந்து  2100 பேர் பலி.. ஆப்கானில் பயங்கரம்!.


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top