Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


இந்தியாவில் நீங்கள் இதுவரை காணாத வினோத ஆலயம்..ஆச்சர்யமான தகவல்!.

இந்தியாவில் நீங்கள் இதுவரை காணாத வினோத ஆலயம்..ஆச்சர்யமான தகவல்!.

ராஜஸ்தான் மாநிலத்தின் 'ஒட்டக தேசம்' என்று அழைக்கப்படும் பிக்கனேர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அழகிய குக்கிராமம் தேஷ்நோக். இச்சிறிய கிராமம் 'கர்ணிமாதா கோயில்' எனப்படும் கோயிலுக்காக மிகவும் புகழ் பெற்றது. இந்த கர்ணி மாதா கோயில் எலிக்கோயில் என்றும் பிரபலமாக அழைக்கப்படுகிறது.ஏன்.?இது எலிக்கோயில் என்று அழைக்கப்படுகிறது எலிகளுக்கும் இந்தக் கோயிலுக்கும் என்ன தொடர்பு..

இந்தியாவில் வேறெங்கும் நீங்கள் கர்ணி மாதா கோயிலை போன்று எலிகளை வணங்கும் வினோத வழிபாட்டு முறையை காண முடியாது. இதன் காரணமாகவே இந்தக் கோயில் எலிக் கோயில் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. கர்ணி மாதா கோயில் கபாஸ் என்று அழைக்கப்படும் 20,000-க்கும் மேற்பட்ட எலிகளுக்கு வாழ்விடமாக இருந்து வருகிறது. 

எலிகள் அனைத்தும் 'சரண்ஸ்' எனும் பெயர்கொண்ட கர்ணி மாதாவின் எதிர்கால குழந்தைகளின் ஆன்மாக்களை சுமந்து கொண்டு திரிவதாக தேஷ்நோக் கிராமத்தை சேர்ந்த மக்கள் நம்புகின்றனர். கர்ணி மாதா கோயிலிலுள்ள எலிகள் புனிதமாக கருதப்படுவதால் பக்தர்கள் இந்த எலிகளிடம் மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பக்தர்களின் கால் பாதங்களில் இந்த எலிகளின் ஸ்பரிசம் படுவது நற்பேற்றின் அடையாளமாக நம்பப்படுகிறது....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top