Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



தக்காளி சாப்பிடுங்க தந்தையாகுங்க..ஆய்வில் ஸ்வீட் நியூஸ்!.

தக்காளி சாப்பிடுங்க தந்தையாகுங்க..ஆய்வில் ஸ்வீட் நியூஸ்!.

தக்காளிப் பழங்களின் பிரகாசமான சிவப்பு நிறத்திற்கு காரணமான முக்கிய இரசாயனக் கூறானது ஆண்களில் இனவிருத்தி ஆற்றலை ஊக்குவிப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். லைகோபீன் என்ற மேற்படி இரசாயனப்பொருள் ஆண்களின் இனவிருத்தி ஆற்றலை 70 சதவீதத்தால் அதிகரிப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு வருடமாக மேற்கொள்ளப்பட்ட 12 ஆய்வுகளின் பிரகாரம் மேற்படி லைகோபீன் இரசாயனத்தை தினசரி அதிகளவில் வழங்குவதன் மூலம் ஆண்களின் இனவிருத்தி ஆற்றலைத் தூண்டி குழந்தைப் பேற்றை ஊக்குவிக்க முடியும்.அத்துடன் லைகோபீன் ஆண்களில் விதைப்பை தொடர்பான நோய்களை குறைப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் விதைப்பை புற்றுநோய் விருத்தியடைவதைத் தடுக்கவும் தணிக்கவும் கூடியதென ஏற்கெனவே மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தக்காளிப்பழங்களில் பெருமளவிலுள்ள லைகோபீன் கரட், தர்ப்பூசணி மற்றும் பப்பாளி போன்ற சிவப்பு நிறப் பழங்களிலும் காணப்படுகிறது....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top