Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



காதலர்கள் கழுத்தில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா.?

காதலர்கள் கழுத்தில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா.?

காதலை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான ஒரு வழி தான் முத்தம். இத்தகையமுத்தமானது நம் அன்பிற்குரியவர் நம்மீது கோபத்துடன் இருந்தால் கூட,அப்போது ஒரு முத்தத்தின் மூலம் கோபத்தைத் தணிக்கலாம். மேலும் காதலர்கள் முத்தம் கொடுப்பதில் பல வகைகள் உள்ளன. இங்கு எந்த இடத்தில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் என்பதைப் பட்டியலிட்டுள்ளோம் அதைப் படித்து பாருங்களேன்.....

உதட்டில் முத்தம்

காதலர்கள் அதிகம் உதட்டில் தான் முத்தம் கொடுப்பார்கள். இப்படி உதட்டில்முத்தம் கொடுத்தால், அது நான் உன்னை உயிரை விட மேலாக நேசிக்கிறேன் என்றுஅர்த்தமாம்.

கண்களில் முத்தம்

கண்களின் மேல் முத்தம் கொடுத்தால், அதற்கு நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தமாம்.

கைகளில் முத்தம்

கைகளில் முத்தம் கொடுத்தால், அவர் உங்களை மிகவும் மதிக்கிறார் என்று அர்த்தமாம்.

கன்னத்தில் முத்தம்

கன்னத்தில் முத்தம் கொடுத்தால், உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன்என்று அர்த்தமாம்.

கழுத்தில் முத்தம்

அருகில் வந்து கட்டிப்பிடித்து கழுத்ததில் முத்தம் கொடுத்தால், அதற்கு நீ எனக்கு வேண்டும் என்று அர்த்தமாம்.

நெற்றியில் முத்தம்

நெற்றியில் முத்தம் கொடுத்தால், அதற்கு வாழ்நாள் முழுவதும் உன் அன்பு எனக்கு வேண்டும் என்று அர்த்தமாம்.

மூக்கில் முத்தம்

மூக்கின் மேலே முத்தம் கொடுத்தால், நீ மிகவும் அழகாக இருக்கிறாய், உன்னை விட அழகு வேறு யாரும் இல்லை என்று அர்த்தமாம்.....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top