Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



வேறொரு ஆணுடன் மனைவி நெருக்கம்..ஜாலியா பதில் சொல்லும் கணவன்!.

வேறொரு ஆணுடன் மனைவி நெருக்கம்..ஜாலியா பதில் சொல்லும் கணவன்!.

தனது மனைவியை திக்விஜய் சிங் திருமணம் செய்துகொள்ளுவதில் அதிருப்தியில்லை என்று கூறியுள்ள அம்ரித்தாராயின் கணவன் ஆனந்த்பிரதான், ஒருபடி மேலேயே போய் தன்னைப்போல எல்லோரும் பரந்தமனதுடன் இருந்தால்தான் இந்தியாவில் பெண்கள் முன்னேற்றம் சாத்தியம் என்று கூறியுள்ளார்.இதனிடையே திக்விஜய்சிங்கும், அம்ரித்தாவும் மிகவும் நெருக்கமாக உள்ள புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கணவன் இருக்கும்போதே அந்த பெண் இவ்வாறு முதியவருடன் நெருக்கமாக இருந்துள்ளாரே என்ற ஆதங்கம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. அந்த கணவன் இதுபோன்ற அவமானத்தால் மனமுடைந்துபோயிருப்பாரே என்று பலரும் பரிதாபப்பட்டனர். ஆனால் அம்ரித்தாவின் கணவன் ஆனந்த் பிரதான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: 

பெண்ணுக்கும்,ஆணுக்குமான உறவை புரிந்துகொள்ள மக்களுக்கு தெரிவதில்லை.ஒரு பெண் சுதந்திரமாக இருப்பதையும், சுதந்திரமாக வாழ்வதையும் இந்த சமுதாயம் அங்கீகரிக்க மறுக்கிறது. பெண் என்பவள் பிள்ளை பெற்கும் மிஷினோ அல்லது ஒருவருடைய தனி உரிமையோ கிடையாது. நாம் பெண்களின் மாண்புக்கு மரியாதை கொடுப்பதில்லை. 

பெண்களை மதிக்க தெரியாதவர்களுக்கெல்லாம், விளையாடவும், பிறர் மீது சேற்றை வாரி இறைக்கவும் இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னைப்போன்ற பரந்த மனதுடைய, ஆதரவான ஆண்கள் இருந்தால்தான் இந்தியாவில் பெண்களுக்கு மேலும் சிறப்பான அந்தஸ்து கிடைக்கும். இவ்வாறு அவர் தனது டுவிட்டர் பக்தத்தில் தெரிவித்துள்ளார். 

அருமையான குடும்பம்.....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top