Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இந்தியாவில் இந்த அழகு தேசத்தை உங்கள் கண்கள் பருகிவிட்டதா.?

இந்த அஇந்தியாவில் இந்த அழகு தேசத்தை உங்கள் கண்கள் பருகிவிட்டதா.?ழகு தேசத்தை உங்கள் கண்கள் பருக வேண்டுமா.?

சுற்றுலா ஸ்பெஷல்....

'கடவுளின் சொந்த தேசம்' என்று கேரளாவை ஏன் அழைக்கிறார்கள் என்று ஆலப்புழா வந்தால் புரிந்துகொள்ளலாம். ஏனெனில் மனம் மயக்கும் உப்பங்கழியில் உங்கள் மனம் விரும்பும் ஒருவருடன் படகு இல்லங்களில் செல்வதும், ஓடைகளுக்கு நடுவே வீற்றிருக்கும் ரம்மியமான பசுமை போர்த்திய சோலைகளும் என இனிமையான அனுபவங்கள் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.

எனவே வாருங்கள் ஆனந்தமாய் ஆலப்புழா நகருக்குள் நுழைவோம்! ஆலப்புழாவின் முக்கிய சுற்றுலாத் தலங்கள் அம்பலப்புழா , குட்டநாட், ஆலப்புழா கடற்கரை, கிருஷ்ணாபுரம் அரண்மனை உள்ளிட்ட இடங்கள் ஆலப்புழாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன.....

கிருஷ்ணாபுரம் அரண்மனை..

இந்தியாவில் இந்த அழகு தேசத்தை உங்கள் கண்கள் பருகிவிட்டதா.?

ஆலப்புழா மாவட்டத்தில் அரபிக் கடலோரம் அழகாக காட்சியளித்துக் கொண்டிருக்கும் காயம்குளம் எனும் நகரத்தில் கிருஷ்ணாபுரம் அரண்மனை அமைந்துள்ளது. 18-ஆம் நூற்றாண்டில் அன்றைய திருவிதாங்கூர் மஹாராஜாவான அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா ஒரே ஒரு தளத்தை மட்டுமே கொண்ட ஒரு எளிமையான அரண்மனையாக கிருஷ்ணாபுரம் அரண்மனையை உருவாக்கியுள்ளார். ஒரு மலையின் உச்சியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அரண்மனையை சுற்றி புல்வெளிகள், நீரூற்றுகள் மற்றும் குளங்கள் ஆகியவை காணப்படுகின்றன. 

படகு இல்லங்கள்..

இந்தியாவில் இந்த அழகு தேசத்தை உங்கள் கண்கள் பருகிவிட்டதா.?

ஆலப்புழாவின் பசுமையை உப்பங்கழி நீர்ப்பரப்பின் பின்னணியில் ரசித்து கொண்டே, உங்கள் வீடுகளில் இருப்பதை போன்ற ஒரு உணர்வை தரும் இந்த படகு இல்லங்களில் கிடைக்கும் அனுபவம் ஒரு உயர்ரக ரிசார்ட்டுகளில் கூட உங்களுக்கு கிடைக்காது. இந்த படகு இல்லங்கள் பல்வேறு வடிவங்களுடனும், வெவ்வேறு வசதிகளுடனும் காணப்படுகின்றன. எனவே உங்களுடைய பட்ஜெட்டுக்கு தகுந்தார் போல உங்களால் படகு இல்லங்களை தேர்வு செய்து கொள்ள முடியும். 

குட்டநாடு..

இந்தியாவில் இந்த அழகு தேசத்தை உங்கள் கண்கள் பருகிவிட்டதா.?

கேரள மாநிலத்தின் அரிசிக்கிண்ணம்' என்ற புகழைப் பெற்றுள்ள இந்த குட்டநாட் பகுதி கேரளப்பகுதியின் கிராமப்புற வனப்புக்கான உதாரண ஸ்தலமாகும். இந்த அழகுப்பிரதேசத்தில் அச்சன்கோவில், மணிமாலா, மீனாச்சில் மற்றும் பம்பா போன்ற ஆறுகள் பாய்கின்றன. இந்த ஆற்றுப்பாதையில் படகுகள் மூலம் மளிகைப்பொருட்கள், காய்கறிகள், மீன் போன்றவற்றை வியாபாரிகள் இந்த ஆற்றங்கரைகளில் உள்ள வீடுகளுக்கு விற்பது ஒரு அதிசயமான காட்சியாகும். 

பரபரப்பான மாநர வாழ்க்கையை மட்டுமே அனுபவித்த பயணிகள் இந்த நிதானமான வாழ்க்கை முறையை கண்டு மயங்காமல் இருக்கவே வாய்ப்பில்லை. குட்டநாட் பகுதியில் வாடகைப்படகுகளை ஏற்பாடு செய்துகொண்டு அருகிலுள்ள முக்கிய ஸ்தலங்களுக்கு நீர்ப்பாதை மார்க்கமாகவே பயணிகள் சென்றடையவும் வசதிகள் உண்டு.

நெடுமுடி ...

இந்தியாவில் இந்த அழகு தேசத்தை உங்கள் கண்கள் பருகிவிட்டதா.?

கமல்ஹாசனின் 'இந்தியன்' படத்தில் போலிஸ் அதிகாரியாக வந்து கலக்கிய 'நெடுமுடி வேணுவின்' பிறந்த இடம்தான் ஆலப்புழாவில் உள்ள இந்த நெடுமுடி என்ற அழகிய கிராமம்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top