Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



சூரியன் மேற்கே உதித்து கிழக்கே மறையும் கிரகம் எது தெரியுமா.?

சூரியன் மேற்கே உதித்து கிழக்கே மறையும் கிரகம் எது தெரியுமா.?

சனி கோளின் துணைக்கோளான டைட்டனில் பூமியில் இருப்பதை விட 100 மடங்கு அதிக இயற்கை எரிவாயு உள்ளது. 

ஒரு வால்நட்சத்திரத்தில் சுமார் 1013 கிலோ தண்ணீர் இருக்கும்.

பாம்புகளின் விஷச்சுரப்பிகளைக்கூட விட்டு வைக்காமல் விழுங்கி விடும் திறமை கீரிகளுக்கு உண்டு!

காண்டர் என்ற ராஜாளி பறவையானது, ஒருமுறை தென் அமெரிக்காவில் 20 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த ஒரு விமானத்தையே தாக்கியது.

மரபியல் காரணங்களை விட, வெப்பம், தண்ணீர், மாசு, ஹேர்ஸ்டைல் போன்றவையே வழுக்கை விழுவதற்கு அதிக காரணம்.

ஸ்போர்ட்ஸ் டிரிங்க், எனர்ஜி டிரிங்க் ஆகிய பெயர்களில் விற்கப்படும் பானங்களைவிட இளநீரில் அதிக சத்துகள் உள்ளன. பக்க விளைவுகளும் இல்லை. உலகிலேயே பெரிய விதை தேங்காய்தான்!

பனிக்கரடிகளின் ரோமம் நிறமற்றது. சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால் அவை வெண்மையாகத் தோன்றுகின்றன.

கோழியின் கல்லீரலைப் பயன்படுத்தி ‘ஏ’ குரூப் ரத்தத்தை ‘ஓ’ குரூப் ரத்தமாக மாற்ற முடியும்.

விண்வெளி செல்லும் வீரர்கள் அங்கு ஈர்ப்புவிசை இல்லாததால் கண்ணீர் விட்டு அழக்கூட முடியாது!

முட்டைக்குள் உருவாகும் கோழிக்குஞ்சுகளால், மேல் ஓட்டின் வழியாக சுவாசிக்க முடியும்

சார்லஸ் ஆஸ்போர்ன் என்பவருக்கு 1922 முதல் 1990 வரை தொடர்ந்து 68 ஆண்டுகளுக்கு விக்கல் பிரச்னை இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட 43 கோடி விக்கல்கள். விக்கல் விலகிய அடுத்த ஆண்டே, 97 வயதில் இறந்து போனார் அவர். மெடிக்கல் மிராகிள்?

பூமியைச் சுற்றிவரும் விண்வெளி வீரர்கள் ஒவ்வொரு நாளும் அதிகபட்சம் 16 சூரிய உதயங்களையும் அஸ்தமனங்களையும் காண முடியும்.

உடலியல் ரீதியாக, சிங்கத்தை விட நீர் யானை அபாயமானது.

கடல் மட்டத்தில் இயங்குவதை விடவும், உயரமான மலையில் கடிகாரம் சற்று வேகமாக ஓடும்!

புதன் கிரகத்தில் ஆண்டின் அளவைக் காட்டிலும் நாளின் நீளம் அதிகம்!

சூரியனுக்கு உள்ளே 10 லட்சம் பூமிகளைக்கூட நிரப்பிவிட முடியும்! 

கரப்பான்பூச்சிகளால் நீருக்கடியிலும் 15 நிமிடங்கள் தாக்குப் பிடித்து உயிர்வாழ முடியும்.

5 ஆயிரம் ஆண்டுகள் வயதான பிரமிடுகள் மட்டுமல்ல... அதே வயதான மரமும் பூமியில் உள்ளது.

சுக்கிரனில் மக்கள் வாழ்ந்தால் அவர்கள் சூரியன் மேற்கே உதித்துக் கிழக்கில் மறைவதைக் காண்பார்கள்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top