Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



சுற்றுலா செல்லும் போது நொறுக்குத்தீனியா.? உஷார்... உஷார்...

சுற்றுலா செல்லும் போது நொறுக்குத்தீனியா.? உஷார்...உஷார்...

சம்மர் விடுமுறையில் பீச், கோயில் என்று சுற்றிக்கொண்டிருப்பீர்கள். நாம் என்ன தான் முறுக்கு, சுண்டல் என்று செய்து எடுத்துப்போனாலும் பிள்ளைகள், பானிபுரி, பேல்புரி வயைறாக்களையே கேட்பர். அதை வாங்காவிடில் முகத்தை உம்மென்று வைத்துக்கொள்வார்கள். இதையெல்லாம் வாங்கி கொடுங்கள் தவறே இல்லை. ஆனால் அவர்கள் பரிமாறும் தட்டுகள், கிளாஸ்கள் தூய்மையாக இருக்கிறதா என்று பாருங்கள்.

பல இடங்களில் சாப்பிட்ட தட்டை ஒரு பக்கெட்டில் உள்ள தண்ணீரில் அலசி அடுத்தவர்களுக்குக் கொடுப்பார்கள். அதே தண்ணீரில் தான் மீண்டும் மீண்டும் வெறுமனே அலசி கொடுப்பார்கள். அதுமட்டுமில்லாமல் அந்த தட்டுக்கள் அதுவரை ஈ மொய்த்து  கொண்டு வேறு இருக்கும். சில இடங்களில் மோர், கூழ் விற்பார்கள் ஒரே பாத்திரத்தில் கழுவாமல் அதிலே தான் ஊற்றி கொடுப்பார்கள். தூக்கி குடித்துவிட்டு கொடுத்துவிட வேண்டும்.

ஆனால் சில இடங்களில் குழந்தைகள் அப்படியே சப்பிக்குடிப்பார்கள். அதையும் கழுவாமல் அப்படியே வைத்துக்கொள்வார்கள். இன்னும் சில இடங்களில் மிச்சம் வைக்கும் மோரையே, கூழையோ அதிலே ஊற்றி விடுகிறார்கள். அதனால் வெளியில் செல்லும் நேரத்தில் வெளியில் வாங்கி சாப்பிடுவது தவிர்க்க முடியாதது என்றாலும் அந்த இடத்தில் சுத்தம் பராமரிக்கப்படுகிறதா என்று பார்த்து வாங்கி சாப்பிடுங்கள்.

வாந்தி போன்ற உடல்நலத்தை பாதிக்கும் விஷயங்களில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் இந்த மாதிரி விஷயங்களில் உஷாராய் இருங்கள்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top