Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



சென்னை குண்டுவெடிப்பு சமயத்தில் ஓட்டம் பிடிக்கும் நபர்..பரபரப்பு வீடியோ!.

சென்னை குண்டுவெடிப்பு சமயத்தில் ஓட்டம் பிடிக்கும் நபர்..பரபரப்பு வீடியோ!.

சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் சிபிசிடிஐ போலீசுக்கு முக்கிய தடயம் சிக்கியது.தடயங்களுடன் தனிப்படை போலீசார் பெங்களூரில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில், சென்னையில் குற்றவாளி என்று சந்தேகப்படும் நபர் பற்றிய வீடியோவை சிபிசிஐடி போலீசார் நேற்று இரவு வெளியிட்டனர். 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் காலை 7.10 மணிக்கு பெங்களூரில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு செல்லும் ரயில் வந்தது. வந்த 5 நிமிடத்தில் எஸ்-4, எஸ்-5 ரயில் பெட்டியில் இருக்கைக்கு கீழ் வைக்கப்பட்ட குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது. அதில் ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஸ்வாதி என்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் பலியானார். 16 பேர் படுகாயமடைந்தனர். 

இதற்கிடையில் சிபிசிஐடி ஐஜி சென்ட்ரல் ரயில்நிலைய வீடியோவில் பதிவான ஒரு காட்சியை வெளியிட்டார். அந்தக் காட்சியில் ரயிலில் வந்த 10 நிமிடத்தில் எஸ்-3 பெட்டியில் இருந்து ஒரு நபர் இறங்கி அவசர அவசரமாக ஓட்டம் பிடித்துள்ளார். டி சர்ட் அணிந்த ஒருவர் வழுக்கை தலையுடன் ரயிலில் இருந்து இறங்கி ஓடுகிறார். பின் அவர் மீண்டும் திரும்பி வரவில்லைமற்ற பயணிகள் சாதாரணமாக நடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

அவர் சென்ற சிறிது நேரத்தில் குண்டு வெடிக்கிறது. இதனால் அவர் மீது சிபிசிஐடி போலீசுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.மேலும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேக நபர் பற்றிய தகவல் தெரிந்தால், அவர்கள் சிபிசிஐடி கட்டுப்பாட்டு அறை 044-22502510, 22502500, 7708654202 என்று எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top