Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பிரதமர் பதவியில் மோடி..''இந்தியாவின் எதிர்காலம் இனி எப்படி.?

பிரதமர் பதவியில் மோடி...''இந்தியாவின் எதிர்காலம் இனி எப்படி.?

லோக்சபா தேர்தலில் வீசிய மோடி சுனாமி பேரலையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கத் தேவையான எண்ணிக்கையை விட கூடுதல் தொகுதிகளைப் பெற்று அரியணை ஏற்கிறது. நாட்டின் 16வது பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்க இருக்கிறார். நாடு முழுவதும் 543 லோக்சபா தொகுதிகளில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. 

பின்னர் வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. பாரதிய ஜனதா கட்சி மட்டும் 283 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அடுத்த இடத்தில் மாநிலக் கட்சிகள் 147 இடங்களை பிடித்தன. காங்கிரஸ் கட்சியோ வெறும் 45 இடங்களைத்தான் கைப்பற்றியது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களைவிட மிக அதிகமாக எண்ணிக்கையில் பாஜக வென்றுள்ளதால் அக்கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. 

1984ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. பாஜக முன்னிறுத்திய நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கிறார். அவர் போட்டியிட்ட குஜராத்தின் வதோதரா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி ஆகிய இரு தொகுதிகளிலுமே அபார வெற்றி பெற்றுள்ளார்.

குஜராத்தைச் சேர்ந்த மொரார்ஜி தேசாய் 1977ஆம் ஆண்டு நாட்டின் பிரதமரானார்.தற்போது குஜராத்தை சேர்ந்த நரேந்திர மோடி பிரதமராக இருக்கிறார். வரும் 21-ந் தேதி நாட்டின் 16வது பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்க இருக்கிறார். இந்தியாவின் எதிர்காலம் இனி எப்படி இருக்கும் என்பதை இன்னும் ஆறு மாதத்தில் தெரிந்து கொள்ளாலாம்...!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top