Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



கால்பந்தாட்ட மைதானத்தில் ஓடிய பேய்...கேமராவில் பதிவான அதிர்ச்சி காட்சி!.

கால்பந்தாட்ட மைதானத்தில் ஓடிய பேய்...கேமராவில் பதிவான அதிர்ச்சி காட்சி!.

பொலிவியா நாட்டின் லாபஷ் நகரில் உள்ள ஹர்னண்டோ சிலிஸ் மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது. ரசிகர்கள் ஆர்வமாக போட்டியை ரசித்து கொண்டு இருந்த போது அவர்களின் மத்தியில் நிழல் உருவம் ஒன்று ஓடியது கேமராவினால் படம் பிடிக்கப்பட்டுள்ளது. பொலிவியா நாட்டு மக்கள் இது கண்டிப்பாக பேய்தான் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்த காட்சியை இண்டர்நெட் மற்றும் தொலைக்காட்சியை பார்த்த பலர், இந்த உருவம் முன்னாள் வெனிசுலா அதிபர் ஹூகோ சேவ்ஸ் உருவத்தை ஒடத்து இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். முன்னாள் அதிபர் ஹூகோ சேவ்ஸ் கடந்த 2013ம் வருடம் மார்ச் 5ம் தேதி மரணம் அடைந்தார். இவர் ஒரு கால்பந்தாட்ட பிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கால்பந்தாட்ட போட்டிகள் நடக்கும் போது இதுமாதிரியான நிழல் உருவம் குறுக்கே ஓடுவது இது முதல் தடவை அல்ல. ஏற்கனவே தென் அமெரிக்க மைதானங்களில் இதுபோன்ற நிழல் உருவம் ஓடிய காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top