Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பெண்ணின் அழகு சாமுத்திரிகா லட்சணப்படி எப்படி இருக்கும் தெரியுமா.?

அழகான பெண்ணின் உடல் சாமுத்திரிகா லட்சணப்படி எப்படி இருக்கும் தெரியுமா.?

சாமுத்திரிகா லட்சணப்படி அழகான பெண்ணின் உடல் எப்படி இருக்கும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள்.சாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண்ணுக்கு அழகு பாகங்கள் எப்படி இருக்க வேண்டும்......

நெற்றி: 

சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது. உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும். நெற்றியின் பரந்து விரிந்த அமைப்பைவிட அதில் உள்ள கோடுகளுக்குத்தான் மிக முக்கியம். 2 அல்லது 3 கோடுகள் இருப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள் 

கண்கள்: 

கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போல இருக்க வேண்டும்.. பாலில் விழுந்த வண்டுபோல கண்கள் துள்ள வேண்டும். கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும். பெண்களுக்கு புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும். உருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். சற்றே உருண்டு திரண்ட விழிகள்தான் அதற்காக ரொம்பவும் பெரிய விழிகள் அல்ல. 

மான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண்டவர்கள் கணவருக்கு ஏற்றவராகவும் எல்லா இடத்திலும் நேர்மறை சிந்தனை கொண்டவராகவும் இருப்பார்கள். மருண்ட விழிகளில் சில அமைப்புகள் உண்டு. உருண்ட விழி அதிர்ஷ்டம் மருண்ட விழி கணவருக்கு நல்லதாக இருக்கும் பரந்த விழிகள் பிறரை எளிதில் கவரக்கூடியதாகவும் பெரிய துறையில் பெரிய பதவியில் அமரக்கூடியவராகவும் இருப்பார்கள். 

மூக்கு: 

மூக்கு உயர்ந்து காணப்படுவது நலம். மூக்கின் நுனி அமைப்புதான் முக்கியமாக சொல்லப்படுகிறது. மூக்கின் நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலி அரசாளும் யோகம் அமைச்சராதல் போன்ற யோகம் உண்டு. எலியைப் போன்ற மூக்கு அதாவது லேசாக தூக்கிய படி இருந்தால் காம உணர்வு அதிகமாக இருக்கும் என்பார்கள். ஒரு சிலருக்கு மூக்கின் நுனிப் பகுதி உருண்டு காணப்படும். அவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் குணம் இருக்கும சந்தைப்படுத்துதல் துறையில் சிறந்து விளங்குவார்கள். 

காது ;

காதின் அமைப்பு பரந்து விரிந்து இருக்க வேண்டும். செவி குறுக குறுக மனநிலையும் குறுகி இருக்கும். சிந்தனையும் குறுகலாக இருக்கும். 

வாசம்:

பெண்களின் உடம்பில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, தென்னம்பாளை வாசனை, இலுப்பைப்பூ வாசனை, எலுமிச்சை வாசனை, தாழம்பூ வாசனை, தாமரைப்பூ வாசனை ஆகியவை முன் பக்கமும், பின் பக்கமும் வருமானால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். 

கூந்தல்:

பெண்களின் கூந்தல் நீண்ட கருங்கூந்தலாக இருக்க வேண்டும். பெண்களின் கூந்தலில் மலர் மணம் வீச வேண்டும். சுருட்டை சோறு போடும்” என்று சொல்வார்கள். அதாவது சுருட்டை முடி கொண்டவர்கள் எல்லோரையும் வைத்து சோறு போடுபவர்களாகவும் சுற்றுத்தார் நண்பர்களை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள். அரவணைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். 

கழுத்து: 

பெண்ணின் முகம் முழு நிலவுபோல ஒளிமிக்கதாக விளங்க வேண்டும். பெண்ணின் உதடுகள் உருண்டு திரண்டு பவளம் போலிருந்தால் அழகு. பெண்ணின் பல் வரிசை முத்துக்களைக் கோர்த்தது போல வரிசையாக இருக்க வேண்டும். 

மார்பகங்கள்: 

பெண்ணின் மார்பகங்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக தோன்ற வேண்டும். அத்துடன் மார்பகங்கள் நிமிர்ந்தும் நீண்டும் காட்சி தர வேண்டும். 

கைவிரல்:

பெண்ணின் கைகள் கொளுத்த மீன் போல் சிவப்பாக இருத்தல் வேண்டும். கைவிரல்கள் பயித்தங்காய்போல் அழகாக காட்சி தர வேண்டும். 

இடை:

இளம் பெண்ணின் இடை நடுவில் சிறுத்தும் மேலும் கீழும் விரிந்திருக்க வேண்டும். ஆலிலைப்போல் வயிறு அமைந்திருந்தால் அழகு. வயிறு நல்ல வெள்ளித் தட்டுப்போல் இருந்து தொப்புள் வலது பக்கமாக சுழித்திருந்தாலும் செல்வம் பெருகும். 

தொடை: 

பெண்களின் தொடை வாழைத்தண்டுபோல் பளபள என்று இருக்க வேண்டும். முழங்கால் சிறிதாக இருக்க வேண்டும். பெண்களின் தொடை உரோமம் இல்லாமல் பளிச்சென்று காட்சி தர வேண்டும்.

கால்,பாதம்:

ஒரு பெண்ணின் பாதம் செந்தாமரைப் பூப்போன்று சிவப்பாக இருக்க வேண்டும். கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய வேண்டும். 5 விரல்களும் ஒன்றோடொன்று பொருந்திய நிலையில் இருத்தல் வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகுபோல் அமைந்திருக்க வேண்டும். பாதங்களின் பெருவிரல் நீண்டிருந்தால் நல்லது. காலிலுள்ள நடுவிரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந்தால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். 

குதிகாலின் மேல் வெள்ளை மச்சம் இருந்தால் மகிழ்ச்சியாக வாழ்வாள். மேலும் பிரதானமாக கெண்டைக்கால் பருத்து இல்லாமல் இருப்பது நலம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம் அதுபோல் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் யோகம் உள்ளவர்களாக (அதிர்ஷ்டசாலியாகவும்) இருப்பார்கள்.....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top