Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



மனைவிக்கு போதை மருந்து கொடுத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன்.. அதிர்ச்சி சம்பவம்!.

மனைவிக்கு போதை மருந்து கொடுத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன்.. அதிர்ச்சி சம்பவம்!.

பணத்தாசையால் மனைவிக்கு,கணவனே குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் ராபடி பகுதியை சேர்ந்தவரான ரோஸ்-க்கும் மும்பையை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2013ம் ஆண்டில் திருமணம் நடந்துள்ளது. 

இனிதே ஆரம்பித்த மண வாழ்க்கையில் போக போக கணவரின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு எப்படியாவது அதிகம் சம்பாதிக்க வேண்டும் என பேராசைப்பட்ட கணவர் மனைவியை விபசாரத்தில் ஈடுபட வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரோஸ் இதற்கு மறுத்துள்ளார். 

இந்நிலையில் ரோசுக்கு குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து குடிக்க கொடுத்துள்ளார். மயங்கிய மனைவியை பணத்திற்காக விபசாரத்தில் ஈடுபடுத்தி அதை வீடியோவும் எடுத்துள்ளார். இது போல் கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு மார்ச் வரை தொடர்ந்து மனைவியை சித்ரவதை செய்து வந்துள்ளார். 

மேலும் தான் சொல்வதற்கு உடன்பட மறுத்தால் சமூக வலைதளங்களில் வீடியோவை பரப்பி விடுவதாக மனைவியை மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கணவர் மீது 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்து உள்ளனர் என்றும் குற்றவாளி தலைமறைவாகி விட்டார் எனவும் ராபடி போலிசார் தெரிவித்துள்ளனர்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top