Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



கைரேகை வைத்து உங்கள் காதல் கல்யாணம் பற்றி அறிய ஆவலா.?

கைரேகை வைத்து உங்கள் காதல் கல்யாணம் பற்றி அறிய ஆவலா.?

இந்த படத்தில் சுண்டு விரல்களின் கீழ் இரண்டு ரேகை தெரிகிறதல்லவா? அது தான் இந்த திருமண ரேகை. இந்த படத்தில் காட்டப்பட்டதைப் போல் திருமண ரேகையில் நீளம்,திருமண ரேகையின் அகலம்,திருமண ரேகையின் குறுக்கே வேறு கோடுகள் ஓடுகின்றனவா இந்த மூன்று விஷயங்களையும் கவனித்து விட்டு நாம் இந்த விஷயங்கள் பற்றிய கைரேகை பலன் எப்படி என தெரிந்து கொள்ளலாம்....

எந்த கை பார்க்க வேண்டும்...

நீங்கள் இயற்கையிலேயே எந்த கை பழக்கமுடியவரோ அந்த கையில் பார்க்க வேண்டும். பொதுவாக இந்தியாவில் பழக்க வழக்கம் காரணமாக அனைவரும் வலது கை பழக்கமுடையவர் போல தோற்றம் அளித்தாலும் பிறக்கும்போது இயல்பாய் இடது கை பழக்கமுடையவராய் கூட இருந்திருக்கலாம். ஆகவே எது நமது இயற்கையான டாமினென்ட் கையோ அந்த கையில் உள்ள ரேகைகளை பார்க்க வேண்டும். 

உங்கள் காதல் வெற்றி பெறுமா இல்லையா?

திருமண ரேகை முதலில் திருமண சம்பிரதாயத்தை குறிக்கவில்லை. அது நம் வாழ்க்கையின் ஏற்படும் காதல் உறவுகளை பற்றியது. ஆகவே இந்த ரேகையை காதல் ரேகை என அழைப்பதே பொறுத்தமானது. ஆக உங்கள் வாழ்க்கையின் காதல் உறவுகள் எத்தனை என்பதை இந்த காதல் ரேகை காட்டிவிடும். ஒன்றிற்கு மேற்பட்ட ரேகைகள் இருந்தால் அது ஒன்றிற்கும் மேற்பட்ட காதல் உறவுகளை காட்டும்.இதை வைத்தே உங்கள் காதல் வெற்றி பெறுமா இல்லையா எனவும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 

திருமண ரேகையில் நீளம்...

திருமண ரேகையின் நீளத்தை வைத்து உங்கள் உறவு எவ்வளவு காலம் நிலைக்கும் என தெரிந்து கொள்ளலாம். நீளம் கம்மியாக இருந்தால் அந்த உறவு அதிக காலம் நிலைத்திருக்காது. 

திருமண ரேகையின் அகலம்..

திருமண ரேகை அல்லது காதல் ரேகை தடித்திருந்தால் அது உங்கள் காதல் உறவின் மேல் நீங்கள் கொண்ட அன்பின் ஆழத்தை காட்டும். மெலிதாக இருந்தால் அது அந்த உறவின் ஆழமின்மியை குறிக்கும். 

திருமண ரேகையின் குறுக்கே கோடு..

திருமண ரேகையின் குறுக்கே வேறு கோடுகள் ஓடினால் அது நிச்சயம் நல்லதறகல்ல. சில பிரச்சினைளையே குறிக்கும். அது இல்லற வாழ்க்கை (இல்லற இன்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளாகவோ அல்லது மன ஒற்றுமை இல்லாமல் அடிக்கடி சண்டை போடும் பிரச்சினையாகவோ இருக்கலாம்.)


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top