Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


பாம்புகளை மயக்கும் தாழம்பூவில் மனிதர்களை ஈர்க்கும் மருத்துவ நலன்கள்!.

பாம்புகளை மயக்கும் தாழம்பூவில் மனிதர்களை ஈர்க்கும் மருத்துவ நலன்கள்!.

மனதை மயக்கும் மனத்துடன் மருத்துவ நலன்களையும் அள்ளித்தருகிறது தாழம்பூ. மனிதர்களை மட்டுமல்ல கொடிய விஷம் கொண்ட பாம்புகளையும் தன் வசம் ஈர்க்கும் சக்தியுடையது.....

ரத்தம் சுத்தமடைய

உடலில் சில சமயங்களில் பித்த நீர் இரத்ததில் கலந்துவிடுகிறது. இதனால் ரத்தம் அசுத்தம் அடைகிறது. அசுத்தம் அடைந்த ரத்தத்தை சுத்தப்படுத்த காயவைத்து பொடி செய்து நீரில் ஊறவைத்து அருந்தி வந்தால் ரத்தம் சுத்தமடையும். 

பசியை தூண்டக்கூடியது

தாழம்பூவை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் 1ஸ்பூன் அளவு பொடியை நீரில் இட்டு கொதிக்க வைத்து அருந்தி வந்தால் நன்கு பசி எடுக்கும்.  

வயிற்றுப் பெருமல் நீங்க

உணவின் மாறுபாட்டாலும் ரேநம், காலம் கடந்து உணவு உண்பதாலும் வயிற்றில் வாயுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்று பெருமலை உண்டாக்குகிறது. இதை போக்க நிழலில் உலர்த்தி அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்வயிற்று பெருமல் குணமாகும். 

ரத்த சோகை நீங்க

ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் மெலிந்து காணப்படுவார்கள். சுறுசுறுப்பு இல்லாமல் எப்போதும் சோம்பி திரிவார்கள். 

உடல்சூடு தணிய

உடல் சூடானால் வெப்ப நோய்கலின் தாக்கம் அதிகரிக்கும். உடல் சூட்டை தடுக்க தாழம்பூவை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும், அல்லது பூவை மணப்பாகு செய்து குடித்து வந்தால் உடல்சூடு குணமாகும். 

தாழம்பூவிலிருந்து தாழம்பூ தைலம் வடிக்கலாம். இந்த தைலம் தலைவலி, உடல் வலி உள்ளவர்களுக்கு மேல் பூச்சாக தடவினால் உடல் வலி தலைவலி நீங்கும். இதை காதுவலிக்கும் இரண்டு சொட்டு விட்டு வந்தால் காதுவலிகள் குணமாகும்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top